districts

img

கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவனத்திற்கு என்.டி.ஹெச் 4 அந்தஸ்து நிதி தலைவர் கல்யாணசுந்தரம் தகவல்

கும்பகோணம், அக்.8 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பரஸ்பர சகாய நிதியின் 118வது ஆண்டு பேரவை கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. பேரவைக்கு கும்பகோணம் பரஸ்பர சகாய நிதியின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். மயிலாடுதுறை தொகுதி எம்.பி. ராமலிங்கம், மேலாண் இயக்குநர் வேலப்பன், இயக்குநர்கள் எம்.எல்.ஏ அன்பழகன், ஹரிஹரன், பிரகாசம், துரைராஜ், அம்பிகா இளங்கோவன் மற்றும் குருபிரசாந்த் கலந்து கொண்டனர். நிதியின் வளர்ச்சி குறித்து கும்பகோணம் பரஸ்பர சகாய நிதியின் தலைவர் சு.கல்யாணசுந்தரம் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கடந்த 2020-21 ஆம் ஆண்டில் ரூ.75.15 கோடியில் இருந்த நிகர லாபம், புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற பிறகு ரூ.18.12 கோடி அதிகரித்து ரூ.93.27 கோடியாக உயர்ந்துள்ளது. 2021இல் புதிய நிர்வாகம் பொறுப்பேற்றவுடன் நிதியின் ஊழியர்களுக்கு போனஸ் கருணைத் தொகையாக 9 சதவீதம் வழங்கியது மட்டுமின்றி, 2021-22 ஆண்டுக்கான போனஸ் கருணைத் தொகையாக 75 சதவீதம் வழங்கி வரலாற்றிலேயே அதிக போனஸ் கருணைத் தொகையாக 84 சதவீதம் அதாவது சுமார் ரூ.26.25 கோடி வழங்கப்பட்டுள்ளது. தமிழகமெங்கும் 114 கிளைகளுடன் செயல்பட்டு வரும் முன்னோடி நிறுவனமான கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவனத்திற்கு, நிதி நிறுவன வரலாற்றில் முதல் முறையாக ஒன்றிய அரசு என்.டி.ஹெச் 4 அந்தஸ்து வழங்கி உள்ளது. தமிழகமெங்கும் 114 கிளைகளுடன் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தின் புதிய கிளைகளை விரைவில் 30 இடங்களில் திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.

;