districts

இந்தியன் ஆயில் நிறுவனம் கூடுதல் இழப்பீடு தர வேண்டும் ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

தஞ்சாவூர், அக்.17-  இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத் திற்கு, எரிவாயு குழாய் பதிக்க நிலம் அளித்த விவசா யிகளுக்கு, பெட்ரோலியத் துறை அரசாணை 54-ன் படி, கூடுதல் இழப்பீடு கேட்டு வெண்டையம்பட்டி பகுதி விவசாயிகள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.வி. கண்ணன், தமிழ் மாநில விவ சாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் இரா. இராமச்சந்திரன் தலைமை யில் மாவட்ட ஆட்சியரகத் தில் மனு அளித்தனர்.  அந்த மனுவில், “நாகப் பட்டினம் மாவட்டம் நரி மணத்திலிருந்து, திருச்சி மாவட்டம் வாழவந்தான் கோட்டை வரை, தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுகா வெண்டையம்பட்டி, கோட்டரப்பட்டி, ராயமுண் டான்பட்டி, சொரக்குடிப் பட்டி, நவலூர் உள்ளிட்ட கிரா மங்கள் வழியே எரிவாயு குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை, மாற்றுப்  பாதையில் செயல்படுத்திட வும், தவிர்க்க இயலாமல் செயல்படுத்தினால் பெட் ரோலியத் துறை புதிய அர சாணை 54-ன்படி, சந்தை மதிப்பை கணக்கில் கொண்டு அதில் 100 விழுக் காடு இழப்பீடாக வழங்க  வேண்டுமென தொடர் போராட்டத்தில் விவசாயி கள்  ஈடுபட்டனர். இந்நிலையில் கடந் தாண்டு குழாய் பதிக்க வந்த ஐஓசிஎல், வருவாய்த்துறை அதிகாரிகளை, பாதிக்கப் பட்ட விவசாயிகள் ஒருநாள் முழுவதும் சிறைபிடித்தனர். பின்னர் தஞ்சாவூர் வரு வாய் கோட்டாட்சியர் தலை மையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை யில் அரசாணை 54-ன் படி  கூடுதல் இழப்பீடு வழங்க கூடுதல் ஆட்சியர் (ஐஓ சிஎல்-திட்டம்) உள்ளிட்ட  அதிகாரிகள் ஒப்புதல்  அளித்ததன் அடிப்படை யில் போராட்டம் கைவிடப் பட்டது. தற்போது கணக்கிடப் பட்டுள்ள இழப்பீடுத் தொகை மிகக் குறைவாகவும், அரசு  வழிகாட்டி மதிப்பை அடிப் படையாக கொண்டதாகவும் உள்ளது. எனவே அரசா ணையில் உள்ளபடி சந்தை  மதிப்பை கணக்கில் கொண்டு இழப்பீடு வழங்கிட  வேண்டும்” என கூறப்பட்டு உள்ளது.  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பூதலூர் ஒன்றி யச் செயலாளர் இரா.முகில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றியச்  செயலாளர் சி.பாஸ்கர் உள்ளிட்ட ஏராளமான விவ சாயிகள் உடனிருந்தனர்.

;