தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே கூனஞ்சேரி ஊராட்சியில் ரூ.11.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி, ராமானுஜபுரம் ஊராட்சியில் ரூ.14.85 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடையினை பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா திறந்து வைத்தார். நிகழ்வில், திமுக தஞ்சை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் கோவி.அய்யாராசு, பாபநாசம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி கண்ணதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா உள்பட பலர் பங்கேற்றனர்.