districts

img

சொத்து வரி உயர்வை திரும்பப் பெறுக! -சிபிஎம் மனு கொடுக்கும் இயக்கம்

தஞ்சாவூர், ஏப்.11 - சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவல கங்களில் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற் றது.  நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் குறைந்த பட்சம் 25 விழுக்காடும், அதிகபட்சம் 100 விழுக்கா டும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல் சென்னை மாநகராட்சியில் 25 முதல் 150  விழுக்காடும், ஏனைய மாநகராட்சிகளில் 25 முதல்  100 விழுக்காடு வரையில் சொத்து வரி உயர்த்தப் பட்டுள்ளது.  ஒன்றிய அரசு கூறியதாலேயே சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது என தமிழக அரசு  விளக்கமளித்துள்ளது. ஏற்கனவே பெட்ரோல்,  டீசல், எரிவாயு விலை உயர்வு பொது  மக்களை வெகுவாக பாதித்துள்ளது. இந்நிலை யில் சொத்துவரி உயர்வு உள்ளிட்ட பல முறை தாக்குதலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, உயர்த்தப்பட்ட சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம்  தழுவிய மனு கொடுக்கும் இயக்கம் திங்கள் கிழமை நடைபெற்றது.  தஞ்சை மாநகராட்சியில் நடைபெற்ற மனு  கொடுக்கும் இயக்கத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.செந்தில்குமார், மாவட்டக்  குழு உறுப்பினர் என்.குருசாமி, மாநகரச் செய லாளர் எம்.வடிவேலன், மாநகரக் குழு உறுப்பினர் கே.அன்பு, எம்.ராஜன், மாமன்ற உறுப்பினர் எம். வைஜெயந்திமாலா, சுமை தூக்கும் தொழிலா ளர் சங்க மாவட்டச் செயலாளர் த.முருகேசன், கிளைச் செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, கரு ணாநிதி, தர்மராஜ், கணேசன் உள்ளிட்ட பலர்  தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணக்குமா ரிடம் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர். 

சொத்து வரி உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும்: மாநகராட்சி ஆணையருக்கு சிபிஎம் கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, ஏப்.11- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரஹ்மானுக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:  தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கான சொத்துவரியை உயர்த்துவதற்கு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒன்றிய அரசு மாநில திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்கிறபோது மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் உரிமைகளை பறிக்கிற வகையில் நிபந்தனைகள் எதுவும் விதிக்கக் கூடாது. ஆனால் தற்போதைய ஒன்றிய அரசின் நடவடிக்கைகளும் அதற்கேற்ப மாநில அரசின் அரசாணையும் முழுமையாக உள்ளாட்சி அமைப்புகளின் உரிமைகளை பறித்துவிட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதை வன்மையாக கண்டிக்கிறது. நெடுங்காலமாக உள்ளாட்சி அமைப்புகளில் தீர்மானிக்கப்படும் சொத்து வரியை உள்ளாட்சி அமைப்புகள்தான் தீர்மானிக்கும். சென்னை போன்ற பெருநகரங்களில் இருக்கக்கூடிய வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளினுடைய சொத்து மதிப்பும் தமிழகத்தின் இதர பகுதிகளில் இருக்கக் கூடிய மதிப்பும் வியாபாரமும் பெருமளவு மாறுபட்டது. வளர்ந்த பகுதிகளுக்கும் வளர்ச்சியடையாத பகுதிகளுக்கும் ஒப்பீடு செய்யவே முடியாது. 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ள வரி உயர்வு பெரும் சுமையை ஏற்படுத்தும்.  திருச்சி மாநகரில் 70 சதவீதம் ஏழை, நடுத்தர மக்கள் வாடகை வீட்டில் வசிப்பவர்கள். வீட்டுவரி உயர்வால் வாடகை உயரும் அபாயம் இருக்கிறது. அதேபோல் பல ஆயிரக்கணக்கான சிறு வியாபாரிகள் கடைகளை வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்து வருபவர்களுக்கு வாடகை கடுமையாக உயரும் சூழலும் உள்ளது. எனவே தாங்கள் இந்த வரி உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.  இவ்வாறு அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

வல்லம்
தஞ்சை ஒன்றியம், வல்லம் பேரூராட்சி செயல் அலுவலரிடம், கட்சி ஒன்றியச் செயலா ளர் கே.அபிமன்னன் தலைமையில் மனு அளிக்கப் பட்டது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி. செந் தில்குமார், சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பேராவூரணி 
பேராவூரணி பேரூராட்சி செயல் அலுவலர் பா.பழனிவேலிடம், சிபிஎம் ஒன்றியச் செய லாளர் எம்.இந்துமதி தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. நகரச் செயலாளர் வே. ரெங்கசாமி, ஒன்றிய, நகரக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் சுப்பையாவிடம், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமையில் மனு  அளிக்கப்பட்டது. மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் எம்.செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். அதிராம்பட்டினம் நகராட்சி ஆணையரிடம், ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.செல்வம் மற்றும் பலர்  கலந்து கொண்டனர்.

ஒரத்தநாடு 
ஒரத்தநாடு பேரூராட்சி செயல் அலுவல ரிடம், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கோவிந் தராஜ் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. விதொச ஒன்றியச் செயலாளர் பாஸ்கர், விவசாயி கள் சங்க ஒன்றியச் செயலாளர் மோகன்தாஸ், வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் பெர்னா ட்ஷா, ஒன்றியத் தலைவர் மாஸ்கோ, துணைத் தலைவர் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.

அம்மாபேட்டை 
அம்மாபேட்டை பேரூராட்சியில், சிபிஎம் நகரச் செயலாளர் ரவி தலைமையில் மனு அளிக்கப்பட்டது. கட்சி ஒன்றியச் செயலாளர் ஏ.நம்பிராஜன், வாலிபர் சங்க ஒன்றிய செயலா ளர் சரவணன், சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பி னர் மயில்வாகனன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மெலட்டூர் பேரூராட்சியில் ஒன்றியக் குழு உறுப்பினர் துரைராஜ் தலை மையில் மனு அளிக்கப்பட்டது. மாவட்டக் குழு உறுப்பினர் எம்.மாலதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கும்பகோணம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் செந்தில்  முருகனிடம் மனு கொடுக்கப்பட்டது. சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் பார்த்தசாரதி, நகர குழு உறுப்பினர்கள் எம்.கண்ணன், பழ.அன்புமணி, மாமன்ற உறுப்பினர் செல்வம் எஸ்.வி.மணி, ஜி.கண்ணன், பக்கிரி சாமி, மாதர் சங்க பொறுப்பாளர்கள் அறிவுராணி,  சுமதி, தனலட்சுமி உள்ளிட்டோர் கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயரிடம் மனு அளித்தனர்.

சுவாமிமலை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்பகோ ணம் ஒன்றியம் சார்பில் சுவாமிமலை பேரூராட்சி  செயல் அலுவலர் உஷாவிடம் மனு கொடுத்த னர். சிபிஎம் கும்பகோணம் ஒன்றிய செயலாளர் பி.ஜேசுதாஸ், மாவட்ட குழு உறுப்பினர்கள் நாகரா ஜன், நாகமுத்து, கலியமூர்த்தி மகேஸ்வரி, நித்யா,  விஜயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திரு விடைமருதூர், திருப்புவனம் பேரூராட்சி செயல் அலுவலரை சந்தித்து திருவிடைமருதூர் சிபிஎம்  வடக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலா ளர் என்.பி.நாகேந்திரன், ஒன்றியக் குழு உறுப் பினர்கள் சேகர், பக்கிரிசாமி, கோவிந்தராஜன், அந்தோணிசாமி, பிரகாசம், சுப்பிரமணியன், மனு  கொடுத்தனர்.

பாபநாசம்
பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் (பொ) ராஜசேகரிடம் மனு அளிக்கப்பட்டது. இதில் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் காதர் ஹீசைன், பாபநாசம் ஒன்றியச் செயலா ளர் முரளிதரன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஜார்ஜ், சங்கர், மகேந்திரன் கலந்து கொண்டனர்.

;