districts

img

தொலைதூர கிராமங்களிலிருந்து மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல ஆட்டோ வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்

கும்பகோணம், ஆக.31 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் ஒன்றியம் ஆரியசேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஆரியசேரி கிராமத்தைச் சுற்றி யுள்ள கீரனூர், செம்மங்குடி உள்ளிட்ட கிரா மங்களில் இருந்து ஏராளமான மாணவ-மாணவியர்கள் படித்து வருகின்றனர்.  இந்நிலையில் மேற்படி கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி இல்லாததால், பள்ளி  மாணவர்கள் பள்ளிக்கு வருவதில் சிரமம்  ஏற்பட்டது. அவர்கள் சரியான நேரத்திற்கு பள்ளி வருவதற்கும், தொலைதூரத்தில் உள்ள கிராமங்களில் இருந்து மாணவர்கள் வந்து செல்வதற்கு வசதியாகவும் ஆரிய சேரி ஊராட்சி மன்றத் தலைவரும் பள்ளி மேலாண்மை குழு தலைவருமான சித்ரா ரவிச்சந்திரன் தனது சொந்த செலவில் ஆட்டோ ஏற்பாடு செய்து பள்ளிக்கு வழங்கி னார். இதனால் தொலைதூரத்தில் உள்ள மாண வர்கள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வரு வது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவர் களை அழைத்துச் செல்லும் ஆட்டோவை பள்ளியிடம் ஒப்படைக்கும்  விழா பள்ளியில்  நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை யாசிரியர் ந.மேகலா வரவேற்றார். வட்டாரக்  கல்வி அலுவலர்கள் பேபி, செல்வி நிவேதா  மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையா ளர் மு.பாக்கியராஜ், ஆசிரியர் பயிற்றுநர் இரா. சுரேஷ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

;