districts

சிறு, குறு, நடுத்தர விவசாயிகளுக்கு பாரபட்சமின்றி கடன் வழங்க வேண்டும் விவசாயிகள் சங்க ஒன்றிய மாநாடு கோரிக்கை

தஞ்சாவூர், ஜூன் 21 -  தமிழ்நாடு விவசாயிகள் சங்க சேதுபாவா சத்திரம் ஒன்றிய மாநாடு, ரெட்டவயல் வெங்க டேஸ்வரா விழா அரங்கில் விவசாயிகள் சங்க  ஒன்றிய செயலாளர் வீ.கருப்பையா தலைமை யில் நடைபெற்றது. ஒன்றிய பொறுப்பாளர் வி.ஆர்.கே.செந்தில் குமார் வரவேற்றார். ஒன்றிய துணைத் தலை வர் வி.நீலகண்டன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவரும், கரும்பு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளருமான டி.ரவீந்தி ரன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர்  என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் எம்.பழனிஅய்யா, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.வாசு ஆகி யோர் சிறப்புரையாற்றினர். மாநாட்டில் 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  மாநாட்டில் ஒன்றியத் தலைவராக வீ.கருப் பையா, செயலாளராக வி.ஆர்.கே.செந்தில் குமார், பொருளாளராக சத்தியசீலன், துணைத் தலைவர்களாக ஆர்.எஸ்.வேலுச் சாமி, வி.நீலகண்டன், துணைச் செயலா ளர்களாக சிவகுமார், நவநீதன் உள்ளடக்கிய 15 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப் பட்டது.  ரெட்டைவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், கோடிக்கணக்கான ரூபாய் அளவிற்கு மோசடி நடந்து, சம்பந்தப்பட்ட நபர் மீது விசாரணை நடத்தப் பட்டு கிடப்பில் உள்ளது. எனவே, மோசடி செய்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும். கூட்டுறவு வங்கியில், கரும்பு விவ சாயிகளுக்கு அரசு அறிவித்த தள்ளுபடி தொகையை, வங்கிக் கணக்கில் வரவு  வைக்க வேண்டும். கடன் கேட்டு விண்ணப் பித்துள்ள கரும்பு விவசாயிகளுக்கு கடன் பணப்பட்டுவாடா செய்திட வேண்டும்.  சேதுபாவாசத்திரம் கடைமடை பாசனப்  பகுதி என்பதால், காவிரி நீரை நேரடியாக ஏரி,  குளங்களுக்கு திருப்பி நீரை நிரப்பித் தர வேண்டும். சிறு, குறு, நடுத்தர விவ சாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பாரபட்சம் இல்லாமல் கடன் வழங்க வேண்டும். தனியார் நிதி நிறுவனங்களில் கடன்  பெற்று, நெருக்கடி கொடுக்கும் கந்து வட்டிக் காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா பேரிடரில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளுக்கு மாதம் ரூ. 7,500 நிவா ரணம் வழங்க வேண்டும். வேளாண் துறை  மூலம் வழங்கப்படும் விதைகள், உரங்கள், பூச்சி மருந்துகள், உபகரணங்கள் வெளிப் படைத் தன்மையோடு, அனைத்து விவசாயி களுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;