குடவாசல், ஆக.7 - தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் திருவாரூர் மாவட்ட 26 ஆவது மாநாடு கொரடாச்சேரியில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு மாவட்ட தலைவர் எஸ்.தம்புசாமி, மாவட்டத் துணைச் செயலாளர் க.தமிழ்செல்வி ஆகி யோர் தலைமை வகித்தனர். முன்னாள் மாநில குழு உறுப்பினர் சோம.ராஜமாணிக்கம் மாநாட்டுக் கொடியை ஏற்றினார். முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும், சிபிஎம் மாநிலச் செயலாளருமான கே.பால கிருஷ்ணன் சிறப்பு அழைப்பாள ராக கலந்து கொண்டு துவக்க உரை யாற்றினார். வரவேற்பு குழு செயலாளர் கே. செந்தில் வரவேற்றார். விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செய லாளர் ஆர்.குமாரராஜா, சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகை யன் ஆகியோர் வாழ்த்துரையாற்றி னர். மாநிலத் தலைவர் வி.சுப்ர மணியன் புதிய நிர்வாகிகளை அறி வித்து நிறைவுரையாற்றினர். வர வேற்பு குழு பொருளாளர் டி.ஜெய பால் நன்றி கூறினார். முத்துப்பேட்டை கடலோரப் பகுதியில் அதிக அளவில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. எனவே முத்துப்பேட்டையை மையமாக கொண்டு தேங்காய் கொப்பரை கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். நெல்மணிகளுக்கான பாதுகாப்புடன் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். விவசாயிகள் அனை வருக்கும் கூட்டுறவு சங்கங்களில் உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகள் அனைவருக்கும் கூட்டுறவு சங்கங்களில் விவசாயக் கடன் வழங்க வேண்டும். கோயில் மனைகளில் குடியிருப்போர் வாடகை கட்டுவதற்கு கால அவ காசம் கொடுக்காமல், மனைகளில் இருந்து வெளியேற்றும் நடவடிக் கையை அரசு தடுக்க வேண்டும். திருவாரூர் மாவட்டத்தில் கிடைக்கும் வைக்கோலை பயன்படுத்தி, மாவட் டத்தில் பல இடங்களில் காகித தொழிற் சாலை ஏற்படுத்த வேண்டும். விவ சாயிகளின் பயிர் காப்பீட்டு பொறுப்பை அரசை ஏற்று நடத்த வேண்டும். நன்னிலம் பூந்தோட்டத்தில் உள்ள பருத்தி ஒழுங்குமுறை விற் பனை கூடத்தில் வெளிப்படையின்றி பருத்தி ஏலம் விடப்படுகிறது. ஒழுங்குமுறை விற்பனை கூட அதி காரிகள், வியாபாரிகளுக்காக சிண்டி கேட் அமைத்து, பருத்தி விலையை குறைத்து விவசாயிகளை வஞ்சிக் கின்றனர். இதில் அரசு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில், மாவட்டத் தலைவ ராக எஸ்.தம்புசாமி, மாவட்டச் செய லாளராக எம்.சேகர், மாவட்டப் பொருளாளராக வி.எஸ்.கலியபெரு மாள் உட்பட 35 பேர் கொண்ட புதிய மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது.