districts

நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் வி.தொ.ச பூதலூர் ஒன்றிய மாநாடு கோரிக்கை

தஞ்சாவூர், அக்.16-  அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தெற்கு ஒன்றிய 18 ஆவது மாநாடு பூதலூர்  என்.வி நகரில் நடைபெற்றது.  வி.தொ.ச ஒன்றியத் தலைவர் எம்.காம ராஜ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர்  ஆர்.வாசு துவக்க உரையாற்றினார். வி.தொ.ச ஒன்றியச் செயலாளர் எஸ்.வியாகு லதாஸ் வேலை அறிக்கை வாசித்தார். கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினரும், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளருமான எம்.சின்னத்துரை, தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா ளர் என்.வி.கண்ணன், சிபிஎம் ஒன்றியச் செய லாளர் சி.பாஸ்கர், வி.ச ஒன்றியத் தலைவர் கெங்கை பாலு, ஒன்றியச் செயலாளர் கே. தமிழரசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  வி.தொ.ச மாவட்டச் செயலாளர் கே.பக்கிரி சாமி நிறைவுரையாற்றினார்.  புதிய ஒன்றியத் தலைவராக எம்.காம ராஜ், செயலாளராக எஸ்.வியாகுலதாஸ், பொருளாளராக கே.பழனிசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  நிலமற்ற விவசாயத் தொழிலா ளர்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். வீடு கட்டித் தர வேண்டும். மின்  இணைப்பு வழங்க வேண்டும். நூறு நாள்  வேலைத் திட்டத்தை முறைப்படுத்த வேண்டும். விவசாயப் பணிகளுக்கும் நூறு நாள் வேலையை விரிவுபடுத்த வேண்டும். காலை 7 மணிக்கே பணிக்கு வரவேண்டும் என்ற சட்ட விரோத நிபந்தனையை திரும்பப்  பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;