districts

img

போதை பொருள் பயன்பாடு, கடத்தல் விழிப்புணர்வு மாரத்தான்-நெடுந்தூர ஓட்டப் போட்டி

தஞ்சாவூர், ஜூலை 11 -  தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில், போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு “மாற்றத்திற்கான மாரத்தான் 2022” -  நெடுந்தூர ஓட்டப்போட்டி பல்கலைக் கழக வளாகத்தில் இருந்து ஞாயிற்றுக் கிழமை காலை 6 மணியளவில் துவங்கப் பட்டது. இந்த நெடுந்தூர ஓட்டப் போட்டி யான “மாரத்தான்” போட்டியை தமிழக  சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இணைந்து கொடியசைத்து துவக்கி வைத்தனர்.  பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் வீ.அன்புராஜ், துணைவேந்தர் டாக்டர் செ. வேலு சாமி, பதிவாளர் டாக்டர் பி.கே.ஸ்ரீவித்யா, கல்வி புல முதன்மையர் முனைவர் ஏ. ஜார்ஜ் முன்னிலை வகித்தனர்.  மேலும் அமைச்சர் மா.சுப்பிர மணியன் இந்த நெடுந்தூர ஓட்டத்தி லும் கலந்து கொண்டார். அவர் 120 நாடு களிலும், இந்தியாவில் 22 மாநிலங்களி லும் மாரத்தான் ஓட்டத்தில் கலந்து  கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த மாரத்தான் நிகழ்வில் சுமார் 1,350 பள்ளி மாணவ-மாணவியர் கலந்து  கொண்டனர்.

மூன்று பிரிவுகளில் இந்தி யாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து  குறிப்பாக உத்தரப்பிரதேசம், மகாரா ஷ்டிரா, மைசூர் மற்றும் தமிழ்நாட்டின் தஞ்சாவூர், திருச்சி, மதுரை, சேலம், கட லூர், கரூர், கிருஷ்ணகிரி, தேனி,  சென்னை, அரியலூர், பொன்னமரா வதி, நாகப்பட்டினம், பெரம்பலூர், சீர்காழி, ஈரோடு, மயிலாடுதுறை, சிவகங்கை மற்றும் கோவிலூர் போன்ற பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராள மானோர் பங்கேற்றனர். ஆடவர் பிரிவில் டிவிசிந்த் குமார் (உத்தரப்பிரதேசம்), மணிகண்டன் (தஞ்சாவூர்), ராமேஷ்வர் முஞ்சால் (மகாராஷ்டிரா), பிரகதீஸ்வரன் (தஞ்சா வூர்), மணிகண்டா (மைசூர்), வினோத் குமார் (மதுரை), லட்சுமிஷா (மைசூர்)  மற்றும் ஹரிகிருஷ்ணா (திருவையாறு)  ஆகியோர் பரிசு பெற்றனர். பெண்கள் பிரிவில் கே.அர்ச்சனா (மைசூர்), வி.கவிதா (மதுரை), ஏ.கீதாஞ் சலி (திருச்சி), எம்.மல்லேஸ்வரி (மைசூர்), ஆர்.சுவாதி (திருச்சி), தேஜஸ் வினி (திருச்சி), எஸ்.சுகன்யா (தஞ்சா வூர்), டி.லாவண்யா (சேலம்), வி.ரித்திகா (தஞ்சாவூர்) மற்றும் டி.துர்கா (தஞ்சாவூர்) ஆகியோர் பரிசு  பெற்றனர். பாரா ஸ்போர்ட்ஸ் வீரரான பெரம்ப லூரைச் சேர்ந்த எஸ்.கலைசெல்வன் தனது 397வது மராத்தான் போட்டியில்  பங்கேற்றார். அவருக்கு பல்கலைக்கழ கத்தின் சார்பில் சிறப்பு பரிசு வழங்கப் பட்டது. சிறப்பு விருந்தினர்களாக சட்டப் பேரவை உறுப்பினர்கள் துரை.சந்திர சேகரன் (திருவையாறு),  டி.கே.ஜி.நீல மேகம் (தஞ்சாவூர்), தஞ்சை மேயர்  சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர்  அஞ்சுகம் பூபதி மற்றும் பல்கலைக் கழக புல முதன்மையர்கள், இயக்கு னர்கள், துறைத்தலைவர்கள், ஆசிரியர்  மற்றும் பணியாளர்கள், விளையாட்டு அலுவலர்கள் பங்கேற்றனர்.

;