districts

img

பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் தஞ்சை முழுவதும் விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், அக்.22 -  பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்ட  விவசாயிகளுக்கு, பயிர் காப்பீட்டுக் கான இழப்பீடு கிடைக்க உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். தொடர் கனம ழையால், நெல் கொள்முதலில் ஈரப்ப தம் 22 விழுக்காடு என உயர்த்தி கால தாமதமின்றி அறிவிக்க வேண்டும். நெல்லுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். பயிர்க் காப்பீட்டை அரசே ஏற்று நடத்த வேண்டும். உரத் தட்டுப்பாட்டை நீக்கி,  உரங்கள் வாங்கும் போது நுண்ணூட்டங் களையும் வாங்க வற்புறுத்துவதை கண்டித்தும், வாய்க்கால்கள் முறை யாக தூர்வாரப்பட வேண்டும்.  கூட்டுறவு சங்கங்களில் குடியிருப்பு பகுதியை அடிப்படையாகக் கொண்டு  கடன் வழங்க வேண்டும் என வலியு றுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  பூதலூர் வடக்கு ஒன்றியம் சார்பில்,  திருக்காட்டுப்பள்ளி காந்தி சிலை  அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் துக்கு, விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் ஆர்.உதயகுமார் தலைமை  வகித்தார். ஒன்றியத் தலைவர் கே. காந்தி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.ரமேஷ் கண்டன உரையாற்றினர்.  பேராவூரணி பெரியார் சிலை  அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, த.வி.ச சேதுபாவாசத்திரம் ஒன்றியத் தலைவர் வீ.கருப்பையா  தலைமை வகித்தார். ஒன்றியச் செயலா ளர் வி.ஆர்.கே.செந்தில்குமார், சேது பாவாசத்திரம் ஒன்றியத் தலைவர் பால சுந்தர், ஒன்றியச் செயலாளர் சி.ஆர். சிதம்பரம், கோ.ராமசாமி, வே.ரெங்க சாமி, ஏ.வி.குமாரசாமி ஆர்.எஸ்.வேலுச் சாமி, மாவட்டக்குழு உறுப்பினர் ஜாக்கு லின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.  திருவையாறு பேருந்து நிலையம்  அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் துக்கு எம்.ராம் தலைமை வகித்தார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா, வி.ச மாவட்டப் பொருளாளர் எம்.பழனிஅய்யா, வி.தொ.ச ஒன்றியச் செயலாளர் ஆர்.பிரதீப் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருப்பனந்தாள்
திருப்பனந்தாள் கடை வீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கலை மணி தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் செல்வம், ஒன்றிய செயலா ளர் கொளஞ்சிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட் டத்தை விளக்கி மாவட்ட தலைவர் செந்தில்குமார், சிஐடியு துணைத் தலை வர் சா. ஜீவபாரதி, கரும்பு விவசாயி கள் சங்க மாநில செயலாளர் காசிநாதன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
பாபநாசம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின்  பாபநாசம் ஒன்றியக் குழு சார்பில் பாப நாசம் புதிய பேருந்து நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பாபநாசம் ஒன்றியச் செயலாளர் அப்துல் கபூர் தலைமை வகித்தார். மாவட்டத் துணைச் செயலர் காதர் ஹீசேன், சிபிஎம்  ஒன்றியச் செயலர் முரளிதான் பேசினர்.

;