தஞ்சாவூர், மார்ச் 20- தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழி யர் சங்கம் (சிஐடியு) கும்பகோணம் - நாகை மண்டல மத்திய சங்கத் தலைவராக இருந்து மறைந்த தோழர் பி.முருகனின் 2-ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி, தஞ்சை அரசு போக்குவரத்துக் கழக புறநகர் கிளை யில் நடைபெற்றது. கிளைத் தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார். மறைந்த தோழர் பி. முருகனின் படத்திற்கு மாலை அணி வித்து, சிஐடியு மாவட்டச் செயலாளர் சி. ஜெயபால் புகழஞ்சலி உரையாற்றினார். இதில், அரசுப் போக்குவரத்துக் கழக குடந்தை மண்டலத் தலைவர் காரல் மார்க்ஸ், சிஐடியு மாவட்ட துணைச் செயலா ளர் கே.அன்பு, அனைத்துத் துறை ஓய்வூதி யர் சங்கத் தலைவர் என்.குருசாமி, கட்டு மான சங்க மாவட்டச் செயலாளர் இ.டி.எஸ் மூர்த்தி, ஆட்டோ சங்கம் மாநகரச் செயலா ளர் ராஜா, டாஸ்மாக் சங்க மாவட்டத் தலை வர் மதியழகன், அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்க நிர்வாகிகள் ஜீவா, அர்ஜு னன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.