districts

img

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தஞ்சையில் 21 மாநகராட்சி பள்ளிகள் பயன்பெறுகின்றன

தஞ்சாவூர், நவ.8 - ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு பயிலும் அரசுப் பள்ளி மாணவர்க ளுக்கு காலை உணவு வழங்கும் திட்டமான ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை’ தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கி வைத்தார்.  நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதியிலும் பள்ளிக்குச் செல்லக் கூடிய குழந்தைகள், காலையி லேயே புறப்பட்டு விடுவதால், பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்கு கிடைத்தது.  பள்ளிகள் மிகத் தூரமாக இருப்பது மட்டுமல்ல, சிலருடைய குடும்பச் சூழலும் இதற்கு காரண மாக இருக்கிறது என்பதை கருத்தில் கொண்டு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேர சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வரு கிறது. இத்திட்டம் மூலம் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 95 மாண வர்கள் பயன்பெற்று வரு கின்றனர்.  இதன்படி, தஞ்சாவூர் மாநக ராட்சியில் 8 தொடக்கப் பள்ளி யில் பயிலும் 375 மாணவ, மாணவி களுக்கு திங்கள்கிழமை தோறும் சேமியா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார், செவ்வாய்க்கிழமை தோறும் கோதுமை ரவா, காய்கறி கிச்சடி, புதன்கிழமை தோறும் வெண்பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார், வியாழக்கிழமை தோறும் அரிசி உப்புமா மற்றும் காய்கறி சாம்பார், வெள்ளிக் கிழமை தோறும் ரவா காய்கறி கிச்சடி மற்றும் கூடுதலாக சேமியா கேசரியும் வழங்கப்பட்டு வரு கிறது.  இதேபோல் கும்பகோணம் மாநகராட்சியில் 13 தொடக்கப் பள்ளியில் பயிலும் 1067 மாணவ, மாணவியர்களுக்கும் என, தஞ்சா வூர் மாவட்டத்தில் 21 மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், 1,442 மாணவ-மாணவியர்கள் இத்திட் டத்தின் மூலம் பயனடைந்து வரு கின்றனர்.  கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி, தஞ்சாவூர் மாநகராட்சி கூட்டுறவு காலனியில் உள்ள, மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், முதல மைச்சரின் காலை உணவுத் திட்டத்தை, அரசு தலைமை கொறடா முனைவர் கோவி.செழி யன் தொடங்கி வைத்தார்.  

க.பிரேமலதா,  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், தஞ்சாவூர். 

;