தஞ்சாவூர், மார்ச் 14 - அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பட்டுக்கோட்டை நக ராட்சி 32 ஆவது வார்டில் போட்டியிட்ட சண்முகப்பிரியா செந்தில்குமார் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து நகர்மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்நி லையில் நகர்மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட சண்முகப்பிரியா செந்தில்குமார், மாநகராட்சி ஆணையர் சுப்பையா முன்னிலையில் திங்கள்கிழமை நகராட்சி அலு வலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது, திமுக மாவட்டக் கழகப் பொறுப் பாளர் ஏனாதி பாலசுப்பிரமணியன், பட்டுக் கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணா துரை, திமுக ஒன்றிய, நகர, பேரூர் கழக பொறுப்பாளர்கள், நகர்மன்ற உறுப்பினர் கள், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உடனிருந்தனர். நகர்மன்றத் தலைவராக பொறுப்பேற் றுக் கொண்ட சண்முகப்பிரியா செந்தில்குமா ருக்கு சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.