districts

img

பிரிஜ் பூஷன் சிங் உருவபொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்து போராட்டம்!

பிரிஜ் பூஷன் சிங்கின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்ய வேண்டும். மல்யுத்த வீரர்களை அராஜகமான முறையில் கைது செய்த தில்லி காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜூன்.2 ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

அதன்படி, இன்று தஞ்சை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டும், பிரிஜ் பூஷன் சிங்கிற்கு செருப்பு மாலை அணித்தும் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்துக்கு, இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் சந்துரு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ஆம்பல் துரை.ஏசுராஜா, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.கலைச்செல்வி  ஆகியோர் தலைமை வகித்தனர்.

இதில், மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி, இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் கே. நிருபன் சக்கரவர்த்தி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் கே.அருளரசன்,  மாநகர துணைச் செயலாளர் எம்.நாகராஜ், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் அர்ஜுன், மாதர் சங்க மாவட்ட பொருளாளர் என்.வசந்தா, மாவட்ட நிர்வாகிகள் எஸ்.வனரோஜா, முன்னாள் மாவட்டச் செயலர் எம்.மாலதி, மாவட்டக்குழு உறுப்பினர் புனிதா, மகேஸ்வரி, மதுபாலா, ஜெயந்தி, ருத்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தஞ்சை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டும், பிரிஜ் பூஷன் சிங் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்ட 11 பெண்கள் உள்பட 41 பேரை தஞ்சாவூர் கிழக்கு காவல்துறையினர் கைது செய்தனர். 

 

;