districts

img

ரிசர்வ் வங்கி நெறிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு முகாம்

தஞ்சாவூர், நவ.25-  தஞ்சாவூர்  மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களில் ரிசர்வ் வங்கி நெறிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.    நிகழ்ச்சிக்கு, மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ.மருதுபாண்டியன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் மா.விஜயா, கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் ப.சுப்பிரமணியன், துணை முதல்வர் முனைவர் ரா.தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில், சிறப்பு விருந்தினராக தஞ்சை ஆக்ஸிஸ் வங்கி துணை தலைவர் மற்றும் கிளை மேலா ளர்கள் மதுரபிரசாத், வினோத் ஆரோக்கியராஜ் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி மேலாளர் இரா.கண்ணன் செய்திருந்தார்.