districts

ஏப்.26 வைத்தீஸ்வரன் கோயில் நடைபயணம் ரயில்கள் நின்று செல்ல ஏற்பாடு

பாபநாசம், ஏப்.24 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரயில் பயணிகள் சங்கச் செயலர் சரவணன் விடுத்துள்ள அறிக்கையில், வைத்தீஸ்வரன் கோயிலுக்கு நடைபயணமாக சென்று  தரிசனம் செய்து ஊர் திரும்பும் பக்தர்களின் வசதிக் காக வைத்தீஸ்வரன் கோயில்  ரயில் நிலையத்தில் ஏப்ரல் 26  (செவ்வாய்க்கிழமை) அன்று  ஒருநாள் மட்டும் இரண்டு விரைவு ரயில் வண்டிகள் நின்று செல்ல சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  வண்டி எண்.22536 (பனாரஸ் - இராமேஸ்வரம்) அதிவிரைவு வண்டி செவ் வாய்க்கிழமை மதியம் 1:30  மணிக்கும், வண்டி எண்.  16851 (சென்னை - இரா மேஸ்வரம் (போட்மெயில்)) ஏப்.26 நள்ளிரவு 12:05 மணிக் கும் தற்காலிகமாக நின்று செல்லும். இந்த வண்டிகள் கும்பகோணம், தஞ்சை, திருச்சி, நமணசமுத்திரம், செட்டிநாடு, கோட்டையூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். எனவே வைத்தீஸ்வரன் கோயில் சென்று வரும் பக்தர்கள் மேற் படி இரண்டு ரயில் வண்டி களையும் பயன்படுத்தி பய ணம் செய்திடலாம் என தெரி விக்கப்பட்டுள்ளது.

;