districts

img

நிலப் பிரச்சனையால் பாதிப்பு வயதான தம்பதி ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா

தஞ்சாவூர், செப்.12 - குடியிருக்கும் இடத்தில் ஏற்பட்ட நிலப்  பிரச்சனையில் பாதிக்கப்பட்ட வயதான தம்பதியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் சமரசம் செய்து அனுப்பினர். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் திங்கள்கிழமை பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட 346  பேர் மனுக்களை வழங்கினர். இந்த மனுக்கள்  மீது தொடர்புடைய அதிகாரிகள் நடவடிக்கை  எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தர விட்டார்.
கொள்முதல் நிலையம் திறக்க கோரிக்கை
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.வி.கண்ணன் அளித்த  மனுவில், பூதலூர் அருகே கோவில்பத்து கிரா மத்தில் கடந்த 11 ஆண்டுகளாக நெல்  கொள்முதல் நிலையம், ஆபத்சகாயேஸ் வரர் கோயில் இடத்தில் அறநிலையத்துறை அனுமதியோடு செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கோயில் கும்பாபிஷேகம் நடத்த திருப்பணிகள் நடைபெறுவதால், நிகழாண்டு கொள்முதல் நிலையம் கோயில் இடத்தில் செயல்படாது என கோயில்  நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். கொள் முதல் நிலையம் செயல்படும் என்பதால், இப்பகுதியில் 600 ஏக்கரில் நெல் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, ஓரிரு வாரங்களில் அறுவடை செய்யப்படும் நிலை உள்ளது. எனவே உடனடியாக கோவில்பத்து கிரா மத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலை யத்தை திறக்க அனுமதிக்க வேண்டும் என  வலியுறுத்தி உள்ளனர்.
வயதான தம்பதியினர் தர்ணா
நாஞ்சிக்கோட்டை ஊராட்சி தியாகி செல்லத்துரை நகரைச் சேர்ந்த ஏ.அப்துல் ஹமீது(74), அவரது மனைவி ஆஷிகா பேகம்(68) ஆகிய இருவரும் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தின் முகப்பு வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர் களை காவல்துறையினர் சமரசம் செய்து விசாரித்தனர். விசாரணையில், அப்துல்ஹமீதின் பக்கத்து வீட்டில் வசிக்கும் வருவாய்த்துறை யில் பணியாற்றும் பிரகாஷ் என்பவர், குடி யிருக்கும் இடம் தொடர்பாக அடிக்கடி தங்க ளிடம் பிரச்சனை செய்து, தகராறில் ஈடுபடுவ தாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இது  தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

;