districts

img

700 ஆண்டுகள் பழமையான உலோகச் சிலைகள் மீட்பு கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

கும்பகோணம், மே 27 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம் பாடி வட்டம் திருக்கடையூர் அருகே  டி.மணல்மேடு கிராமத்தில் தொன்மை யான 2 உலோக சிலைகள் பதுக்கி  வைக்கப்பட்டிருப்பதாகவும், அவை  கடத்தப்பட இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இந்த ரகசிய தகவலை அடுத்து, சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல்துறை  இயக்குநர் ஜெயந்த் முரளி உத்தரவுப் படி, சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் துறை தலைவர் தினகரன் வழிகாட்டுத லின்படி, சிலை திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜா ராம் தலைமையில், உதவி ஆய்வாளர் சின்னதுரை மற்றும் காவலர்கள் சிலைகளை வாங்கும் வியாபாரிகள் போல் சென்று, கடத்தல்காரனிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் இந்த சிலைகளுக்கு விலை ரூ. 2 கோடி என  சொல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் சிலை கடத்தல்கா ரரை நம்ப வைத்து அவர் சிலையை காண்பித்தவுடன் அவரை மடக்கிப் பிடித்த சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார், தரங்கம்பாடி தாலுகா, டி. மணல்மேடு ரோட்டு தெருவை சேர்ந்த  சுரேஷ்(32) என்பவரிடமிருந்து, புத்தமத  பெண் கடவுள் உலோக சிலை ஒன்றும், அமர்ந்த நிலையில் விநாயகர் உலோக சிலை ஒன்றும் என 2 சிலை களை கைப்பற்றினர். காவல் உதவி ஆய்வாளர் சின்னதுரை, தனி அறிக்கை யுடன் மேற்கண்ட நபரை சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு அலுவல கத்தில் ஒப்படைத்தார். இது தொடர்பாக  வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  இவ்வழக்கின் புலன் விசாரணை அதிகாரி இந்திரா சுரேஷ், விசாரணை யின் தொடர்ச்சியாக கடத்தல்காரனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு ஆட்ப டுத்தினார். மேற்படி 2 சிலைகளில் ஒன்று புத்தமத கடவுளாக கருதப்படும் அபலோ கிதேஸ்வராவின் மனைவி தாரா தேவி யின் சிலை என்று சொல்லப்படுகிறது. காக்கும் கடவுளாக அறியப்படும் தாரா தேவியின் வழிபாடானது, திபெத் நாட்டில் தோன்றியது என்று சொல்லப் படுகிறது. இந்த சிலையானது 700 ஆண்டு தொன்மையானது என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகிறார் கள்.  மற்றொரு சிலையான விநாயகர் சிலை ஏறத்தாழ 300 ஆண்டுகள் தொன்மையானது என்று சொல்லப்படு கிறது. இந்த அரிதான சிலைகள் எப்படி இவரிடம் வந்தது, யார் கொடுத்தது என்பன குறித்து புலன் விசாரணை மேற் கொள்ள வேண்டியுள்ளது. இந்த 2 சிலைகளும் மேல் நடவடிக்கைகாக கும்பகோணம் சிலை தடுப்பு விசாரணை  நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

;