சங்ககிரியில் தனியார் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது சங்ககிரி போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம், சங்ககிரி நகரில் உள்ள கச்சேரிகாடு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் சக்திவேல், அவரது மகன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், அவரது நண்பர்களுடன் சுற்றுலா செல்ல பெற்றோர்களிடம் அனுமதி கேட்டதாக கூறப்படுகிறது. தற்போது கொரோனா காரணமாக பெற்றோர்கள் சுற்றுலா செல்ல அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து மனவருத்தத்தில் இருந்த மாணவன் அவரது வீட்டில் திங்கட்கிழமை அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
இச்சம்பவம் குறித்து மாணவனின் தாத்தா சங்ககிரி காவல்நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் விரைந்து வந்த போலீசார் மாணவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.