சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள கௌமென் பார்மா தொழிற்சாலையில் 11 மாதமாக ஊதிய உயர்வை பேசி தீர்க்காமல் காலம் கடத்துவதை கண்டித்து உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு யூனியன் தலைவர் பி.பிரபு தலைமை தாங்கினார். செயலாளர் டி.முரளிதரன், கே. அன்பரசன், பி. அறிவுக்கரசு, ஆர். முத்துக்குமரன், எ. செந்தில்குமார், சிஐடியு மாவட்டத் தலைவர் பி. கருப்பையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.