districts

சென்னை முக்கிய செய்திகள்

பேருந்து சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி

சென்னை, அக். 16- திருவொற்றியூர் பீர் பயில்வான் தர்கா பகுதியைச் சேர்ந்தவர் இப்ராஹிம் (40). இவர் கொருக்குப்பேட்டையில் உள்ள பட்டறையில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.  திங்கட்கிழமை காலை வேலைக்கு சென்று கொண்டிரு க்கும் போது கொருக்குப்பேட்டை மீனாம்பாள் பாலத்தின்  அருகே சாலையை கடக்கமுயன்றபோது திருவொற்றியூரில் இருந்து செங்குன்றம் சென்ற  மாநகர பேருந்து அவர் மீது மோதியது. இதில் பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வண்ணாரப்பேட்டை போக்குவரத்து காவல் துறையினர் இப்ராஹிம் உடலைக்  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து மாநகர  பேருந்து ஓட்டுநர் சுரேஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலில் குதித்து பெண் தற்கொலை

சென்னை, அக். 16- எண்ணூர் சுனாமி குடியிருப்பில் வசிப்பவர் கண்ணன். இவரது மனைவி பார்வதி. இவர்களது மகள் ராஜேஸ்வரி (19). கடந்த ஜனவரி மாதம் ஆர்.கே. நகரை சேர்ந்த வடிவேல் (33) என்பவருக்கும் ராஜேஸ்வரிக்கும் திருமணம்  நடைபெற்றுள்ளது. சில மாதங்களில் கணவரில் வேலை, வயது சம்பந்த மாக ராஜேஸ்வரிக்கு மனக்குறை ஏற்பட்டு கணவன் மனைவிக்குள் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் ராஜேஸ்வரி திடீரென அருகில் இருந்த கடற்கரைக்கு சென்று  கடலில் இறங்கி விட்டார். அக்கம்பக்கத்தார் உதவி யுடன் ராஜேஸ்வரியை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து எண்ணூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலியான தயாரிப்புகள் பறிமுதல் 

சென்னை.அக்.16- பிரபல நிறுவனத்தின் பெயரில் தயாரிக்கப்பட்ட சாப் கட்டர் பிளேடுகளை அறிவுச்சொத்துரிமை பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். டாடா நிறுவனத்தின் பெயரில் போலியாக இப்பொருட்கள் தயாரிக்கப்பட்டு தமிழகத்தில் பல இடங்களில் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து நாமக்கல் கோட்டை பிரதான சாலையில் உழவர் சந்தை அருகே உள்ள வளர்பிறை ஏஜென்சியில் சோதனையிட்டபோது இந்த பொருட்கள் பறிமுதல்செய்யப்பட்டது. இதுகுறித்து அறிவுச்சொத்துரிமை அமலாக்கப்பிரிவு காவல்துறையின் ஆய்வாளர் என்.கெஜலட்சுமி வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்.   

கிரெடிட் கார்டு பயன்பாடு 65 விழுக்காடு அதிகரிப்பு 

திருச்சி, அக். 16- பண்டிகை காலத்தை முன்னிட்டு  அமேசான் இணையதளத்தில் நடைபெற்ற ஷாப்பிங் திருவிழாவில் 9. 5 கோடிப் பேர் பொருட்களை வாங்கியுள்ளனர். இதனால் சிறிய நடுத்தர நிறுவனங்கள் உள்பட ஆயிரக் கணக்கான விற்பனையாளர்கள்  தங்களது பொருட்களை அதிகபட்ச விற்பனையில் ஈடுபட்டனர். வீட்டு உபயோகப் பொருட்கள் , ஃபர்னிச்சர்கள் மற்றும் என 5,000 க்கும் மேற்பட்ட  புதிய பொருட்களை    வாடிக்கையாளர்கள் வாங்கினர் என்று  அமேசான் நுகர்வோர் வர்த்தக பிரிவு துணைத் தலைவர்  மணீஷ் திவாரி கூறியுள்ளார்.  அமேசான் பே, ஐசிஐசிஐ  பிராண்ட் கிரெட் கார்டுகள் எஸ்பிஐ கார்டுகள்  சலுகைகளை வழங்கியதால் அதனை மக்கள் அதிகமாக பயன்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரயிலில் கஞ்சா கடத்திய இருவர்  கைது

சென்னை, அக். 16- அம்பத்தூர் அடுத்த பட்டரவாக்கம் ரயில் நிலை யத்தில் ரயிலில் கஞ்சா  கடத்தி வந்த  வாலிபர்கள்  2 பேரை அம்பத்தூர் மது விலக்கு காவல்துறையினர் கைது செய்தனர்.  விசாரணையில் அவர் கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த முன்னா நாயக் (34) பிதம்பரநாயக் (28)  என்பதும் ஒடிசா மாநிலத்தில்  இருந்து கஞ்சா கடத்தி வந்து  அம்பத்தூர் தொழிற்பேட் டையில் பணிபுரியும் வட மாநில வாலிபர்களை குறி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கடத்தப்பட்ட குழந்தை 4 மணி நேரத்தில் மீட்பு: காவல்துறைக்கு குவியும்  பாராட்டு

சென்னை, அக். 16- ஒடிசாவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (அக். 15) இரவு லங்கேஸ்வர் - நந்தினி கண் காகர் தம்பதி சென்னைக்கு வந்துள்ளனர்.  இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. அவர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே படுத்து  தூங்கியுள்ளனர். நள்ளிரவு ஒரு மணி அள வில் அவர்களுடைய ஒரு வயது குழந்தை காணவில்லை. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர் ரயில் நிலையம் முழுவதும் தேடிப்பார்த்தும் குழந்தை கிடைக்கவில்லை. இதையடுத்து இது குறித்து ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உடனடியாக காவல் துறையினர் அங்கிருந்த சிசிடிவி காட்சி களை சோதனை செய்தபோது, 2 பேர் இவர்கள் நடுவில் தூங்கி கொண்டிருந்த குழந்தையை தூக்கிச் செல்வது போன்ற காட்சிகள் இருந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவர்கள் எங்கெங்கு சென்றார்கள் என்பதை தொடர்ந்து கண்காணித்தனர். அவர்கள் வெளியில் சென்று ஆட்டோவில் குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து அந்த ஆட்டோ எங்கெல்லாம் சென்றது தொடர்பாக ஆய்வு  செய்தனர். தொடர்ந்து 4 மணி நேர ஆய்விற்கு  பிறகு அந்த குழந்தை குன்றத்தூர் பகுதியில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக ஆட்டோ ஓட்டுநர் உதவியுடன் அங்கு சென்ற  காவல் துறையினர் குழந்தையை பத்திர மாக மீட்டனர். குழந்தையை கடத்தி சென்றது  ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பரபாஸ் மண்டல் மற்றும் நமீதா என்பது தெரிய வந்தது. பின்னர் அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் மீட்கப்பட்ட குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தை கடத்தப்பட்ட 4 மணி நேரத்தில் குழந் தையை மீட்ட காவல் துறையினருக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கேரளத்தால் முடியாத ஒன்று இல்லை

விழிஞ்ஞம் துறைமுக விழாவில் பினராயி விஜயன் பெருமிதம்

திருவனந்தபுரம், அக்.16- கேரளத்தால் முடியாத ஒன்றில்லை என்பதை விழிஞ்ஞம் துறைமுகம் நிரூபிப்பதாக முதல்வர் பினராயி விஜயன் கூறினார். அடுத்த சில நாட் களில் மேலும் 8 கப்பல்கள் இங்கு வரும் என்று துறைமுக அதிகாரிகள் கூறிய தாகவும், ஆறு மாதங்களில் திட்டம் முழு மையாக இயக்கப்படும் என்று உறுதி யளித்ததாகவும் முதல்வர் கூறினார். விழிஞ்ஞம் துறைமுகத் திட்டத்தை ஞாயிறன்று தொடக்கி வைத்து முதல்வர் மேலும் பேசுகையில், “எவ்வ ளவு பெரிய நெருக்கடியானாலும் சமாளித்துவிட முடியும் என்பதை நமது ஒற்றுமையின் மூலம் நிரூபித்துள்ளோம். அதை இந்த விசயத்திலும் பார்க்கலாம். இது தொடர்பான செயற்பாடுகளாலும், எமக்கு ஏற்பட்ட நெருக்கடிகளாலும் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளமை உண்மை. ஆனால் சொன்னது போல் விரைவாக பணியை முடிக்க முடிந்தது. இந்தத் திட்டம் நிறைவேற வேண்டும் என்று அனைத்து மக்களும் விரும்பினர். ஏனெனில் உல கில் இது போன்ற துறைமுகம் அரிது.  இது மிகவும் வளர்ச்சித் திறன் கொண்டது.  உண்மை என்னவெனில், அதைப் பற்றிய புரிதல் நமக்கு இல்லை. இத்துறைமுகம் அமைந்தால் ஏற்படும் வளர்ச்சி கற்பனை க்கும் அப்பாற்பட்டதாக இருக்கும். பொருத்தமான அணுகுமுறையை நாம் பின்பற்ற வேண்டும் என்பதுதான். துறைமுகத்தின் ஒரு பகுதியாக வெளிவட்டச் சாலையை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன் மூலம்  புதிய திட்டங்கள் வரும் என மதிப்பிடப் பட்டுள்ளது. ஆனால் புதிய திட்டத்தின் சாத்தியம் எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளது. இந்த துறைமுகம் நமது வளர்ச்சி வேகத்தை வலுப்படுத்தும். வளர்ச்சி யடைந்த கேரளத்தை நாம் விரும்பு கிறோம். அதற்கேற்ப ஒவ்வொரு துறை யும் வலுப்பெற வேண்டும். அதற்கான தெளிவான தொலைநோக்கு பார்வை யுடன் முன்னேறி வருகிறோம். நாம் இணைந்து செயல்பட்டால் முடியாதது இல்லை. உலகின் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளின் வாழ்க்கைத் தரத்திற்கு கேரளத்தை உயர்த்துவதை நோக்க மாகக் கொண்டுள்ளோம். இது விழிஞ்ஞம் மற்றும் கேரளாவின் பெருமைக்குரிய தருணம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கே பெருமை மிக்க தருணம் என்பதை நாம் பார்க்க வேண்டும். ஜூன் 2017 இல், இது தொடர்பான கட்டுமானப் பணிகள் தொடங்கப் பட்டன. ஆனால் சில தடைகள்  ஏற்பட்டன. உலகின் சர்வதேச துறைமுகங் களின் பட்டியலில் விழிஞ்ஞம் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது. இவ்வாறான ஒரு முன்னேற்றம் ஏற்படும் போது, சில சர்வதேச லாபிகள் தமது நலன் கருதி அதற்கு எதிராக செயல்படுகின்றன. இங்கும் அத்தகைய சக்திகள் முன்பு இருந்தன என்பது உண்மை. சில வணிக லாபிகளும் துறைமுகம் நிஜமாவதில் ஆர்வம் காட்டவில்லை. அவர்களும் குறுக்கிட்டனர். ஆனால் அவை அனை த்தையும் எதிர்கொண்டு திட்டம் நிறைவேறி யுள்ளது. இந்தியாவிற்கு கேரளத்தின் பெரும் பங்களிப்புகளில் ஒன்றாக இத்துறைமுகத்தை நாம் பார்க்க வேண்டும். வேறு எந்த துறைமுகத்திலும் இல்லாத பல சாத்தியக்கூறுகளை விழிஞ் ஞம் கொண்டுள்ளது. இது சர்வதேச துறை முகமாக மாற வேண்டும் என்பதில் எங்களுக்கு தெளிவான நிலைப்பாடு உள் ளது. எங்களால் அதையும் கொண்டு வர முடிந்தது” என முதல்வர் தெரிவித்தார்.

உதவித்தொகையுடன் பி.எச்டி பட்டம்:  ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு

சென்னை, அக். 16- முதலமைச்சர் ஆராய்ச்சி முனைவர் பட்ட தகுதி தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்மூலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முழு நேர முனைவர் பட்ட ஆராய்ச்சியில் ஈடு படுவோர் பயன்பெற முடியும். அதாவது, தேர்வில் தகுதி பெறுவோருக்கு உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப் படும். தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முழு  நேர ஆராய்ச்சி படிப்பில் ஈடுபட்டு முனைவர் பட்டம் பெற விரும்புவோருக்கு நற்செய்தி கிடைத்துள்ளது. அதாவது, முதலமைச்சர் ஆராய்ச்சி முனைவர் பட்ட தகுதி தேர்வு  (சிஎம்ஆர்எப்) என்ற பெயரில் தேர்வு எழுத  ஆசிரியர் தேர்வு வாரியம்  அழைப்பு விடுத்துள்ளது. இதில் தேர்வு பெறு வோருக்கு உதவித்தொகை வழங்கப்படும். முனைவர் பட்ட தகுதித் தேர்வு இந்நிலையில் 2023-24ஆம் கல்வி யாண்டில் முதலமைச்சர் ஆராய்ச்சி முனைவர் பட்ட தகுதி தேர்வு எழுத  ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் நவம்பர் 15 மாலை 5 மணி. மொத்தம் 120 பேர் தேர்வு செய்யப்படுவர். அதில் கலை, மனித வளம், சமூக அறிவி யல் பிரிவில் 60 பேரும், அறிவியல் பிரிவில்  60 பேரும் அடங்குவர். எந்தெந்த பிரிவுகள் அதிலும் கலை, மனித வளம், சமூக அறிவியல் பிரிவின் கீழ்  தமிழ், ஆங்கில இலக்கியம் - 10 பேர், வரலாறு,  சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை, புவியியல் - 10 பேர், அரசியல் அறிவியல், பொது நிர்வாகம் - 10 பேர், வர்த்தகம், மேலாண்மை கல்வி, சமூகப் பணி - 10  பேர், பொருளாதாரம் - 10 பேர், ஊடகவியல், பத்திரிகை மற்றும் தகவல் தொடர்பியல் மொத்தம் 120 பேருக்கு வாய்ப்பு இசை, ஆடை வடிவமைப்பு மற்றும் பேஷன், நூலகம் மற்றும் தகவல் அறிவியல், உடற்கல்வி, உளவியல் - 10 பேர் என இடம் ஒதுக்கப்படுகிறது. அறிவி யல் பிரிவின் கீழ் கணிதம் / புள்ளியியல் - 10 பேர், இயற்பியல் / எலக்ட்ரானிக்ஸ் - 10 பேர், வேதியியல் / உயிர் வேதியியல் - 10 பேர், தாவரவியல், விலங்கியல், உயிரியல், உயிர் தொழில்நுட்பவியல் - 10  பேர், கணினி அறிவியல் / தகவல் தொழில் நுட்பவியல் - 10 பேர், சுற்றுச்சூழல் அறிவியல் / மண்ணியல் / ஹோம் சயின்ஸ் - 10 பேர்  என இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்வும், மதிப்பெண்களும் இந்த தேர்வை எழுத விண்ணப்பக் கட்டணம், தேர்வு கட்டணம், பதிவுக் கட்டணம் எதுவும் இல்லை. மொத்தம் 3 மணி நேரம்  நடைபெறும் தேர்வுக்கான மொத்த மதிப்பெண் 100. இதில் இரண்டு பகுதிகள் இடம்பெறும். முதல் பகுதியில் கொள்குறி வினாக்கள் 40 அடங்கும். நெகட்டிவ் மதிப்பெண்களும் வழங்கப்படும். தேர்வு தேதி இரண்டாம் பகுதியில் கட்டுரை வடிவில் பதில் அளிக்கும் வகையில் 60 மதிப்பெண்களுக்கு 6 கேள்விகள் இடம்பெறும். இதற்காக தகுதி மற்றும் இணைக்க வேண்டிய சான்றுகள் குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (https://trb.tn.nic.in/) விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வு தேதி ஹால் டிக்கெட்கள் இடம்பெற்றிருக்கும். எனவே தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வள்ளலார் பல்லுயிர் காப்பக திட்ட நிதி பெற விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம்,அக்.16- விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொண்டு நிறுவனங்கள்  வள்ளலார் பல்லுயிர் காப்பகப் திட்ட நிதி பெற விண்ணப்பிக்க லாம் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:- விலங்குகளுக்கு உணவு, மருத்துவ சிகிச்சை அளிக்க ரூ.5 கோடியும், காயமடைந்த மற்றும் நோய்வாய் பட்ட விலங்கு களுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட, காயமடைந்த,  தெருவில் சுற்றித் திரியும் பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு செய்வதற்கு தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு மருத்துவ அவசர சிகிச்சை ஊர்தி கொள்முதல் செய்ய  ரூ.4 கோடியே 56 லட்சம், விலங்குகளுக்கு உறைவிடம் கட்டுவதற்கு ரூ.5 கோடியும், தெரு நாய்கள் இனப்பெருக் கத்தை கட்டுப்படுத்த கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பூசி செலுத்துவதற்காக ரூ.5 கோடியும் ஆக மொத்தம் ரூ.20 கோடி, அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. எனவே வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தில் நிதி உதவி பெற்று பயன்பெற விரும்பும் விழுப்புரம்  மாவட்டத்தை சேர்ந்த அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆற்று மணல் குவாரியில் அமலாக்க பிரிவு சோதனை

விழுப்புரம்,அக்.16- விழுப்புரம் தென்பெண்ணை ஆற்றில் உள்ள மணல் குவாரியில் திங்களன்று (அக்.16) அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்றது. விழுப்புரம் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் ஏனாதிமங்கலம் என்ற இடத்தில் அரசு சார்பில் மணல் குவாரி  அமைக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட் டுள்ளது. இந்த நிலையில், விதிகளை  மீறி அதிக அளவில் மணல் எடுத்த புகார் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் உட்பட 20 பேர் கொண்ட குழுவினர்  திடீர் சோதனை நடத்தினர். 

மழைநீர் சேகரிப்பு  விழிப்புணர்வு பிரச்சாரம்

கள்ளக்குறிச்சி, அக். 16- கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில்  மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் விழிப்புணர்வு மின்னணு காணொலி பிரச்சார ஊர்தியை மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள், நீர் ஆதாரங்களை உருவாக்குதல்,  நீர்நிலைகளை மாசுபடாமல் பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் வடகிழக்கு பருவமழையின் போது மழைநீரை சேகரித்து மாவட்டத்தில் நிலத்தடி நீர்  நிலைகளை உயர்த்தும் வகையில் பொதுமக்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள் மழை நீர் சேகரிப்பின் முக்கியத்து வம் குறித்து அறிந்து கொள்வதற்கு இந்த பிரச்சாரம் நடைபெறுகிறது.