districts

img

பத்தலப்பள்ளி அணை விரைந்து கட்டி முடிக்கப்படுமா?

பேர்ணாம்பட்டு, டிச.24- – வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே உள்ள பத்தலப்பள்ளி அணையை விரைந்து கட்டி முடிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. பத்தலபள்ளி அணையை விரைந்து கட்டி முடிக்க வேண்டும், பத்திலப்பள்ளி சோதனை சாவடி முதல் ஆம்பூர் பாங்கி ஷாப் வரை உள்ள சாலையில் ஆக்கிர மிப்புகளை அகற்றி தார் சாலை அமைத்து கொடுக்க வேண்டும், சோதனை சாவடி முதல் மஜீத் பின்புறம் அணை வரைக்கும் விவசாயிகள் சென்று வர சாலை வசதியை செய்து கொடுக்க வேண்டும். பத்தலப்பள்ளி கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைத்து கொடுக்க வேண்டும், இடிக்கப்பட்ட நரிக்குற வர் குடியிறுப்புகளை உடனடியாக கட்டி தரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்ககைளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலகம் எதிரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் பலராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. சாமிநாதன் துவக்கி வைத்தார். பேர்ணாம்பட்டு தாலுகா செயலாளர் சரவணன், மாவட்டக் குழு உறுப்பினர் குணசேகரன், குடியாத்தம் தாலுகா செயலாளர் சிலம்பரசன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர்.