சென்னை,நவ.20- தாம்பரம் மாநகராட்சி, புலிக்கொரடு கிராமத்தில் ராஜீவ் காந்தி நகர் உள்ளது. 2.33 ஏக்கர் (சர்வே எண்.113ல் ) நிலத்தில் 4 தலைமுறைகளாக 102 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆதிதிரா விடர், பழங்குடியினர் இனத்தை சேர்ந்த இந்த மக்களை வனத்துறை அப்பகுதியிலிருந்து அகற்ற முயற்சிக்கும் போதெல்லாம் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தி தடுத்து வருகிறது. 2006 ஆம் ஆண்டி லிருந்து 4 அரசுகள் அமைந்துள்ளன. இந்த அரசுகளின் வருவாய்த் துறை, வனத்துறை, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் மார்க்சிஸ்ட் கட்சி தலை வர்கள் பேச்சு வார்த்தை நடத்தி வந்தார். 2015ம் ஆண்டு வன நிலத்திற்கு ஈடாக செங்கல்பட்டு அருகே வேதநாராயணபுரம் கிராமத்தில் 4.66 ஏக்கருக் கும் அதிகமான நிலத்தை வனத்துறைக்கு வருவாய்த் துறை கொடுத்தது.
அண்மை யில் தலைமைச் செயலா ளரையும் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் சந்தித்து முறையிட்டனர். இதன் பிறகு, வனத் துறை ராஜீவ் காந்தி நகர் நிலத்தை வருவாய்த் துறையிடம் ஒப்படைக் காமல் உள்ளது. இதனால் பட்டா வழங்கும் பணி தடைபட்டு நிற்கிறது. இது தொடர்பாக வனத்துறை, வருவாய்த்துறை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத் துறை அமைச்சர்கள், தலைமை செயலாளர், மாவட்ட ஆட்சியர், வரு வாய் மற்றும் வனத்துறை அதிகாரிகளை பலமுறை சந்தித்தும் பிரச்சனைக்கு தீர்வு காணாமல் உள்ளனர். நவ.24 கூட்டு முறையீடு இந்த நிலையில் ஞாயிறன்று (நவ.19) ஊர்க் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், தாம்பரம் பகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா, ராஜீவ் காந்தி நகர் குடியிருப்பு பாதுகாப்பு சங்க தலைவர் கு.ராசன் மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், நவ.24 அன்று செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் பெருந்திரள் கூட்டு முறையீடு போராட்டம் நடத்து வது என்று முடிவெடுக்கப் பட்டது. இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண் முகம் கலந்து கொள்கிறார். 17 ஆண்டு காலமாக குடிமனைப்பட்டா கேட்டு அப்பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அரசு விரைந்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்குமா?