districts

img

சிதம்பரத்தில் வீனஸ் பள்ளி மீண்டும் முதலிடம்

சிதம்பரம், மே 7- சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு தேர்வு  எழுதிய 240 மாண வர்களும் தேர்ச்சி பெற்று 100  விழுக்காடு தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவி கே.அபி ராமி 600 க்கு 591 மதிப்பெண் கள் பெற்று சிதம்பரம் நகர  அளவில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.  மாணவி எஸ்.திவ்யதர்ஷினி 587 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மாண வன் ஆர்.சபரிராஜன் 585 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றுள் ளார். இதில்  550 மதிப்பெண்க ளுக்கு மேல் 44 மாணவர்க ளும், 500க்கும் மேல் 137 மாணவர்களும் மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும் கணிதத்தில் 3 பேர், இயற்பியல் 1, வேதியி யல் 1, உயிரியல் 8,  கணினி அறிவியல் 6.  வணி கவியல் 7.தாவரவியல் 1,  விலங்கியல் 1,  என 100-க்கு  100 மதிப்பெண்கள் எடுத்துள் ளனர்.  மேலும் தமிழ், பொரு ளியல், கணினி பயன்பாடு கள் பாடத்தில் 99 மதிப் பெண்களும், ஆங்கிலத்தில் 98 மதிப்பெண்களும், கணக்குப்பதிவியல் பாடத் தில் 98 மதிப்பெண்களும், வணிக கணிதம் பாடத்தில் 92 மதிப்பெண்களும் அதிகபட்ச மதிப்பெண் களை எடுத்து சிறப்பிடம் பெற்றுள்ளனர்.  வெற்றி பெற்ற மாணவர் களுக்கும் இதற்கு உறு துணையாக இருந்த  துணை  முதல்வர் மற்றும் ஆசிரி யர்களுக்கு பள்ளியின் தாளாளர் எஸ்.குமார், முதல்வர் ரூபியல்ராணி துணை முதல்வர் நரேந்திரன் ஆகியோர் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்த னர்.