districts

img

ரூ.13 கோடி செலவில் வாகன சுரங்கப்பாதை: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

சென்னை, அக். 7-  சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், வார்டு 52 மற்றும் 53 போஜராஜன்  நகர், கண்ணன் தெருவை இணைக்கும் வகையில் ரயில்வே சந்திக்கடவு 11 ஏ-ல் ரூ.13.40 கோடி மதிப்பில் வரையறுக்கப்பட்ட வாகன சுரங்கப்பாதை அமைக்கும் திட்ட பணியினை அமைச்சர்கள் கே.என். நேரு,  பி. கே. சேகர்பாபு ஆகியோர் வெள்ளிக் கிழமை (அக்.7)  தொடங்கி வைத்தனர்.  இந்த திட்ட பணியின் மொத்த மதிப்பு ரூ.20 கோடி. இந்த சுரங்கப்பாதையின் மொத்த  நீளம் 207 மீ, அகலம் 6 மீட்டர். இதில் 37 மீட்டர் ரயில்வே நிர்வாகத்தாலும், 170 மீட்டர் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பிலும் அமைக்கப்பட உள்ளது. இதில்  ரயில்வே  சார்பில் 37 மீட்டர் நீளத்திற்கான  பணியை மேற்கொள்ள சென்னை மாநகராட்சியின் சார்பில் மூலதன நிதியி லிருந்து ரூ.6.60 கோடி ஏற்கனவே ரயில்வே நிர்வாகத்திடம் வழங்கப்பட்டுள்ளது.  ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் இப்பணி முடிவுற்றுள்ளது. சென்னை மாநக ராட்சியின் சார்பில் ரூ.13.40 கோடி மதிப்பில்  மூலதன மானிய நிதியின்கீழ் 170 மீட்டர்  நீளத்திற்கு அணுகு சாலை அமைக்கப்பட வுள்ளது என்று மாநகராட்சி செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

;