districts

லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

 கடலூர்,ஜூலை.28 -

      கடலூர் மாவட்டம், கல்குணம் கிராமத்தை சேர்ந்த எம்.ஜான்சி ராணி (40).இவரது பாட்டி தவமேரி இறப்பு குறித்து சண்முகசுந்தரத்திடம் தகவல் தெரிவித்தி ருக்கிறார்.  ரூ.1,000 கொடுத் தால் பதிவு செய்வதாக தெரிவித்திருக்கிறார்.  

    இது குறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் செய்தார்.  இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ஜான்சிராணியிடம் கொடுத்த பணத்தை   சண்முகசுந்தரிடம் கொடுத்தார்.

    மறைந்திருந்த காவல்துறையினர் லஞ்ச பணம் வாங்கும் போது கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.