districts

“விடுதலைப் போரில் வீரத்தமிழகம்”: ஒளி, ஒலி காட்சி செப்.1 வரை நீட்டிப்பு

சென்னை, ஆக. 25- சென்னையில் சுதந்திர தினத்திற்காக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒலி-ஒளிக்காட்சி செப்டம்பர் 1ஆம் தேதி வரை நீட்டிக் கப்பட்டுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட தேசத் தலைவர் களைப் போற்றிச் சிறப்பிக் கும் வகையில்  அமைக்கப் பட்டுள்ள “விடுதலைப் போரில் வீரத்தமிழகம்” என்ற  முப்பரிமாண ஒளி-ஒலிக் காட்சி கடந்த 15ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. ஆகஸ்ட் 25ஆம் தேதியு டன் முப்பரிமாண காட்சி நிறைவடையும் என தெரிவிக் கப்பட்டிருந்த நிலையில், இந்த ஒளி-ஒலிக் காட்சியை,  பொதுமக்கள் மற்றும் கல்லூரி, பள்ளி மாணவர் கள் அதிகளவில் பார்வை யிடுவதற்கு ஏதுவாக செப்  1ஆம் தேதி வரை நீட்டித்து  தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது. 200 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டங்கள், ஆங்கிலேயரின் அடக்கு முறைகள், சுதந்திரத்தின் அருமை ஆகியவற்றை இளம் தலைமுறையினர் அறியும் வகையில் இந்த  முப்பரிமாண ஒளி-ஒலிக்  காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் இந்தி யாவின் விடுதலைக்குப் போராடிய அரும்பெரும் தலைவர்கள் மற்றும் வரலாற்று நிகழ்வுகள் கொண்ட மாதிரிகளை வடிவமைத்து, அவர்களின் வீரதீரச் செயல்கள் மற்றும்  தியாகங்கள் காட்சிப்படுத் தப்பட்டுள்ளன. இக்கண்காட்சி காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. இக்கண்காட் சிக்கு நுழைவுக் கட்டணம் இல்லை.

;