districts

img

செங்கல்பட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

செங்கல்பட்டு. ஜூலை 6- செங்கல்பட்டில் தடுப்பூசி போட  வந்த பொதுமக்கள் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக  நீண்டநேரம்  காத்திருந்து பின்னர் திடீர் போராட் டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் கொரோனா  தொற்றின் தாக்கம் சற்று குறைந்து வந்தாலும் இரண்டாம் அலையின் பொழுது ஏற்பட்ட இழப்பின் காரண மாக பொதுமக்கள் தாமாகவே முன்  வந்து கொரோனா தடுப்பூசி செலுத் திக் கொள்வதற்கான ஆர்வங்கள் தற்போது அதிகரித்துள்ளது. ஒன்றிய அரசிடமிருந்து தடுப்பூசி வரும் வரை தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் அடிக்கடி நிறுத்தி வைக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. கடந்த ஒரு வார காலமாக செங்  கல்பட்டு மாவட்டத்திற்கு வர வேண்டிய தடுப்பூசிகள் வராத கார ணத்தினால் சிறப்பு முகாம்கள் எதுவும்  நடைபெறாமல் இருந்து வந்தன. இத னால் செங்கல்பட்டு நகர் பகுதியில்  அமைந்துள்ள அரசு கலை கல்லூரி யில் தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தன.

இந்நிலையில் செவ்வாயன்று மாவட்ட சுகாதார நிலையத்தில் கையிருப்பில் இருந்த தடுப்பூசிகள் அனைத்தும் தீர்ந்ததாக கூறப்படு கின்றது. இதனால் செவ்வாயன்று தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தி வைத்திருந்தனர். இது குறித்து முறை யான அறிவிப்பு பலகைகள் எதுவும்  வைக்காத காரணத்தினால்  தொடர்ந்து வரிசையில் நின்றிருந்த பொதுமக்களிடம் அதிகாரிகள்  தடுப்பூசி போடுவது இல்லை என தெரிவித்துள்ளனர். இதனால் நீண்ட நேரம் காத்தி ருந்த பொதுமக்கள் கோபமடைந்து அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இத னைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு  விரைந்த செங்கை நகர காவல்  ஆய்வாளர் விநாயகம், பொதுமக்களி டம் பேச்சு வார்த்தை நடத்தினார். மேலும் அனைவருக்கும் டோக்கன்  வழங்கப்படும் என்றும் தடுப்பூசிகள் வந்தவுடன் முன்னுரிமை அளிக்கப்ப டும் எனவும் தெரிவித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

;