districts

img

காத்திருந்து காத்திருந்து .... ரெட்டணையில் திறக்கப்படாத குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்

விழுப்புரம், அக்.14- ரெட்டணை ஊராட்சியில் பொது மக்களின் குடிநீர் சுத்திகரிப்புக்கு வாங்கிய ரூ.15 லட்சம் மதிப்பிலான எந்திரம் பயன்பாட்டுக்கு வராமலேயே பாழடைந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ரெட்டணை ஊராட்சியில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. 2018-19 ஆம் ஆண்டில் மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் பொது மக்கள் பயன்பாட்டிற்காக அப்பகுதி யில், ரூ.15 லட்சம் மதிப்பில் சுத்தி கரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் அமைக்கப்பட்டது. ஆனால், மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. கிராம மக்களும் ஒன்றல்ல இரண்டல்ல நான்கு வருடமாகியும் ஏமாற்றமே மிஞ்சியது. இதன் மூலம்‘காத்திருந்து காத்திருந்து காலங்கள் தான் போகுதம்மா’என்ற பாடல் வரிகளை அதிகாரிகள் உண்மையாக்கி வருகின்றனர்.  காட்சிப்பொருளாக வைத்திருக்கும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை உடனடியாக மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.