சிதம்பரம், மார்.9- அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்வுத்துறையில் தேர்வு சம்பந்தப்பட்ட தகவல்களை மாணவர்கள் பெறுவதற்காக மாணவர்கள் உதவி மையத்தை பல்கலைக்கழக துணை வேந்தர் இராம கதிரேசன் திறந்து வைத்தார். இம்மையத்தை 7397724062, 6369468133 என்ற அலைபேசி எண்களில் மாணவர்கள் தொடர்பு கொண்டு தேர்வு சம்பந்தமான சந்தேகங்களை தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் மாணவர்களின் நேரமும், அவசியமற்ற பயணமும் தவிர்க்கப்படுகிறது.