districts

img

2 வருடமாக வேலையில்லாமல் பரிதவிக்கும் சுமைப்பணி தொழிலாளர்கள்

விழுப்புரம், மார்ச் 8- விழுப்புரத்தில் கொரோனாவால் வேலையின்றி வறுமையில் உள்ள சுமைப் பணி தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வலியுறுத்தி சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் தலைவர் எம்.சுரேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. உணவுப்பொருட்கள் சேமிப்பு கிடங்குகளில் வேலை பார்க்கும் சுமைப்பணி தொழிலாளர்கள் கொரோனா கட்டுப்பாடுகளால் நீண்ட நாட்களாக வேலையின்றி வாழ்வாதாரம் இழந்து தவித்து வரு கின்றனர். அவர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும். குடோன் காலியாக இருந்தும் உரம் உள்ளிட்ட சரக்குகள் உள்ளே வருவதற்கு மாமூல் கேட்கும் மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. வெளி குடோன்களுக்கு ஒப்பந்ததாரர்களே சரக்குகளை ஏற்றிச் செல்வதால் சுமைப்பணி தொழிலாளர்கள் பாதிக்கப் படுகின்றனர். அதனைத் தடுத்து நிறுத்தி சுமைப்பணி தொழிலாளர்களே வெளி சரக்குகளை ஏற்றி, இறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர் களுக்கு வாகன நிறுத்து மிடம், ஓய்வறை ஆகியவற்றை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.மூர்த்தி, மாவட்ட சுமைப்பணி சங்க பொதுச் செயலாளர் பி.குமார், மாவட்டத் தலைவர் எஸ்.முத்துக்குமரன், மாவட்டப் பொரு ளாளர் வி.பாலகிருஷ்ணன், எம்.பழனி, டாஸ்மாக் சுமை பணி சங்கத்தின் தலைவர் டி.மணிகண்டன், செயலாளர் டி.இளவரசன், பொருளாளர் பி. அய்யப்பன், வேர்ஹவுஸ் செயலாளர் கே.பாரதிதாசன், பொருளாளர் கே.புஷ்பராஜ், துணை தலைவர்கள் கே.பாலு, கே.ஓம்சக்தி, துணை செயலாளர்கள் எஸ்.வசிகமலை, ஆர்.வடிவேல் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

;