districts

img

பதராகிப்போன 100 ஏக்கர் நெல்மணிகள்: உளுந்தூர் பேட்டை விவசாயிகள் வேதனை

கள்ளக்குறிச்சி, மார்ச் 19 - உளுந்தூர்பேட்டை அருகே அறுவடை நேரத்தில் ஏரி நீர் வற்றியதால் 100 ஏக்கர் மேல் நெல் பயிர்கள் காய்ந்து நெல் மணிகள் பதராகியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை அருகே உள்ள வானம்பட்டு கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியின் தண்ணீரை நம்பி வானம்பட்டு மட்டிகை ஆகிய கிராமத்தைச் சேர்ந்த விவ சாயிகள் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் சம்பா  நெல் பயிரிடப்பட்டனர் நல்ல விளைச்சலுடன் இருந்த நெற்பயிர்கள் அறுவடை நேரத்தில் ஏரியில் உள்ள தண்ணீர் வற்றியதால் கருகிப்போனது.  நெல்மணிகள் காய்ந்து பதராகியுள்ளது இதனால் ஒரு ஏக்கருக்கு 30 முதல் 35 மூட்டை வரை கிடைக்கும் நிலையில் தற்பொழுது 5 நெல்  மூட்டை  கூட கிடைக்காது என தெரிவித்த விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை கடன் வாங்கி செலவிடப்பட்டதாக குமார் என்ற விவசாயி கவலையுடன் தெரிவித்துள்ளனர். இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தாக கண்ணீருடன் தெரிவித்த விவசாயிகள் வேளாண் துறை அதிகாரிகளை இவ்விடத்தில் பார்வையிட்டு உரிய இருப்பிட வழங்க வேண்டும் எனவும் ஏரி மற்றும் ஏரிக்கு வரும் நீர்வரத்து வாய்க்கால்களையும் தூர்வாரி தர வேண்டும் என தமிழக அரசுக்கு விவ சாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். - ஜெ.சசிகுமார்