districts

img

விரைவில் மீட்டர் கட்டணம் அறிவிப்பு

சென்னை, செப். 15 – மீட்டர் கட்டணம் விரைவில் அறிவிக்கப் படும் என்று ஆட்டோ தொழிற்சங்க தலை வர்களிடம் போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார். ஆட்டோக்களின் மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கடந்தாண்டு பிப்ரவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து மே மாதம்  அரசு பேச்சுவார்த்தை நடத்தியும் கட்ட ணம் உயர்த்தப்படவில்லை. இதனைத் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர்கள் தொடர் இயக்கங்களை நடத்தி வந்தனர். இதனையடுத்து தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன தலைவர்களை அழைத்து பேசிய உள்துறை செயலாளர், கட்டணம் நிர்ணயிக்க தேவையான நடவடிக்கைககளை எடுப்பதாக உறுதி யளித்தார். இந்த நிலையில் வெள்ளி யன்று (செப்.15) எழிலகத்தில் ஆட்டோ தொழிற்சங்க பிரதிநிதிகளை அழைத்து போக்குவரத்து ஆணையாளர் சண்முக சுந்தரம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம், பொருளாளர் உமாபதி உள்ளிட்டு, எல்பிஎப், ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.  அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் மனு அளித்து பேசிய தலைவர்கள், முதல் 1.5 கிலோ மீட்டருக்கு 50 ரூபாயும், அடுத்தடுத்த கிலோ மீட்டருக்கு 25 ரூபாய்  என்ற அடிப்படையில் விஞ்ஞான பூர்வ மாக கட்டணம் நிர்ணயிக்க வேண்டும், ஜிபிஎஸ் கட்டணமின்றி வழங்க வேண்டும்;  அதற்கான கட்டுப்பாட்டு மையம் அமைக்க  வேண்டும், ஆட்டோ செயலியை அரசே  தொடங்க வேண்டும். இவை அனைத்தையும் ஒரேசேர அமல்படுத்தினால்தான், ஏழை  எளிய மக்களும், ஓட்டுநர்களும் பயனடைய முடியும். உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து சுமார்  18 மாதங்களாகியும் கட்டணத்தை உயர்த்தா மல் இருப்பது சரியல்ல என்று வலியுறுத்தி னர். இதனைத் தொடர்ந்து பேசிய ஆணையர், மீட்டர் கட்டணம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிட தேவை யான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஆணையர் உறுதியளித்தாக எஸ்.பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.