குற்றவியல் நடைமுறை சட்டங்களை இந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் மொழிமாற்றம் செய்து மசோதா தாக்கல் செய்ததை திரும்ப பெற வலியுறுத்தி கடலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கடலூர் நீதிமன்றம் அருகே உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது. செயலாளர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். பொருளாளர் பாபு, துணை செயலாளர் சிலம்பரசன், மூத்த வழக்கறிஞர்கள் வனராசு, லெனின், மாசிலாமணி, நாகவேந்தன், நல்லதம்பி, லோகநாதன், ஜோதிலிங்கம், தமிழரசன், சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர்கள் சார்பில் நடைபெற்ற உண்ணாநிலை போராட்டத்தில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் ஏ.சங்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.