புதுச்சேரி ஆட்சியராக இருந்த வல்லவன், கோவா மாநிலத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து,காரைக்கால் மாவட்ட ஆட்சி யர் குலோத்துங்கன் அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார். புதுச்சேரி பேட்டையன் சத்திரத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை (பிப்.12) குலோத்துங்கன், புதுச்சேரி ஆட்சி யராக பொறுப்பேற்றுக் கொண்டு கோப்புகளில் கையொப்பமிட்டார்.