சென்னை, ஜூலை 22–
சிமாட்ஸ் பல்கலைக்கழகத்தின் சிமாட்ஸ் பொறியியல் கல்லூரியில் 3–ம் ஆண்டு படிக்கும் 19 மாணவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை பணி அமர்த்த கேஏஏஆர் டெக்னாலஜிஸ் நிறுவனம் முன்வந்துள்ளது.
தற்போது இந்த மாணவர்கள் பயிற்சிவுடன் ஆண்டுக்கு 8 லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலைக்கும் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். இவர்கள் அந்த நிறுவனத்தில் பயிற்சி பெறுவதோடு அங்கேயே பணி அமர்த்தப்பட உள்ளனர். இந்த தகவலை பல்லைக்கழகத்தின் வேந்தர் என்.எம். வீரையன் தெரிவித்தார்.