மதுராந்தகம்,மே 22-
மதுராந்தகம் ரயில் நிலையத்தில் இருந்து தின மும் சென்னை மற்றும் புற நகர் பகுதிக்கு ஆயி ரத்துக்கும் சென்று வரு கின்றனர். ஒரு சில ரயில்கள் மட்டுமே மதுராந்தகத்தில் நின்று செல்கின்றன.
இந்த நிலையில் மது ராந்தகம் ரயில் நிலையத்தில் திருச்செந்தூர், ராக்போர்ட் ரயில்கள் நிற்க வேண்டும், சென்னையில் இருந்து செங்கல்பட்டு வரை வரும் யூனிட் ரயிலை மேல் மருவத்தூர் வரை காலை, மாலை இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்டோர் திங்க ளன்று மதுராந்தகம் ரயில் நிலையம் அருகே திடீர் உண்ணா நிலைப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.