புதுச்சேரி, ஜூலை 31-
புதுச்சேரி பெரிய அங்காடியை இடித்து புதிதாக கட்டு வதற்கு எதிர்ப்பு தெரிவித்து திங்களன்று (ஜூலை 31) வணிகர்கள் கருப்புக்கொடி ஏற்றி, கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வியாபாரிகள் நடத்திய கடையடைப்பு போராட்டத்திற்கு காங்கி ரஸ், திமுக, சிபிஎம், சிபிஐ, விசிக சார்பில் ஆதரவு தெரிவித்து நேரு-காந்தி வீதி சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எதிர்க் கட்சித் தலைவர் சிவா, கட்சி தலைவர்கள் ராஜாங்கம், முருகன் (சிபிஎம்), சலீம், சேது செல்வம் (சிபிஐ), தேவை பொழிலன்(விசிக), முன்னாள் அமைச்சர்கள் கண்ணன், சிவகுமார், கந்த சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.