districts

img

டி.பி.ஜெயின் கல்லூரியை கையகப்படுத்த வேண்டும் மாணவர்கள், குடியிருப்போர் சங்கம் போராட்டம்

சென்னை, ஜூன் 27 - அரசு உதவி பெறும் பாடப்பிரிவு களில் மாணவர்களை சேர்க்காமல் மோசடியில் ஈடுபட்டு வரும் டி.பி.ஜெயின் கல்லூரியை கையகப்படுத்த வலியுறுத்தி, அந்த கல்லூரி முன்பு மாணவர்களும், குடியிருப் போர் சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, துரைப்பாக்கத்தில் 50  ஆண்டுகளுக்கும் மேலாக டி.பி.ஜெயின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு இளங்கலை, முதுகலை என 10  பாடப்பிரிவுகள் உள்ளன. 1990 களுக்கு பிறகு சுயநிதி அடிப்படை யில் மேலும் 10 பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டன.

கட்டணக் கொள்ளை
கடந்த சில ஆண்டுகளாக அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளையும், சுயநிதி பாடப்பிரிவாக மாற்றி கல்லூரி நிர்வாகம் அதீத கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது. 2020-21ஆம் ஆண்டு முதல் அரசு உதவி பெறும் பிரிவில் மாணவர் சேர்க்கையை நடத்தவில்லை. 10 ஆண்டுகளுக்கும் மேலாக புதிய பேராசிரியர்களையும் நியமிக்க வில்லை. அரசின் விதிகளுக்கு புறம் பான நடவடிக்கைகளை எதிர்த்த  11 பேராசிரியர்களை நிர்வாகம் சட்ட விரோதமாக பணி நீக்கம் செய்துள் ளது. எனவே, தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் (ஒழுங்குமுறை) சட்டம்,  1976 பிரிவு 14 (அ)-ன்படி கல்லூரியை அரசு கையகப்படுத்த கோரி திங்க ளன்று (ஜூன் 27) கல்லூரி வாயிலில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது.

30ஆயிரம் குடும்பங்கள்
டி.பி.ஜெயின் கல்லூரி பாதுகாப்பு  இயக்கம் நடத்திய இந்தப் போராட்டத் தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், “சென்னை நகரில் இருந்து குப்பை  போல் கொண்டு வந்து பெரும் பாக்கம், செம்மஞ்சேரி, கண்ணகி நகரில் சுமார் 30 ஆயிரம் குடும்பங்கள்  கொட்டப்பட்டுள்ளன. அந்த மக்க ளுக்கு கல்வி வழங்கும் அரசு  உதவி பெறும் கல்லூரியை, தனியார் மயமாக்க அனுமதிக்க முடி யாது. அதேசமயம் பெரும்பாக்கத் தில் உள்ள அரசு கல்லூரியின் உட்கட்டமைப்பை அரசு மேம்படுத்த வேண்டும்” என்றார்.

முதல்வரிடம் வலியுறுத்தல்
“இந்த கல்லூரி தொடர்பாக முதல மைச்சர், உயர்கல்வித்துறை அமைச் சரிடம் நேரடியாக வலியுறுத்தி உள் ளோம். டி.பி.ஜெயின் கல்லூரியை போன்று பிற உதவி பெறும் கல்லூரி களும் முறைகேட்டில் ஈடுபடுவ தற்கு முன்பு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று  வலியுறுத்திய வேல்முருகன், “அரசு உதவிபெறும் பாடப்பிரிவுக ளில் நடப்பாண்டு முதல் மாணவர்  சேர்க்கையை நடத்த வேண்டும். அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். கல்லூரிக்கு தனி அலுவலர் நியமிப்பதோடு, பணி நீக்கம் செய்யப்பட்ட 11 பேராசிரியர்களுக்கும் பணி வழங்க வேண்டும்” என்றார்.

ஆர்எஸ்எஸ் ஷாகா
“தமிழகத்தில் மத கலவரத்தை தூண்ட ஆர்எஸ்எஸ் ஷாகாக்களை நடத்தி வருகிறது. அரசு உதவி  பெறும் டி.பி.ஜெயின் கல்லூரி, மீனம் பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகங்களில் ஆர்எஸ்எஸ் ஷாகா  நடத்த அரசு எப்படி அனுமதிக்கிறது? ஆர்எஸ்எஸ்-க்கு அரசு ஸ்பான்சர் செய்கிறதா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார். போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் இரா.பாரதி தலைமை தாங்கி னார். சோழிங்கநல்லூர் தொகுதி குடியிருப்போர் நல சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகி பிரான்சிஸ் மற்றும் ஜெயவேல் (சிபிஎம்), ம.விஜயகுமார் (சிஐடியு), தீ.சந்துரு (இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்) உள்ளிட்டோர் பேசினர்.