districts

ஓஎம்ஆர் பகுதியில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு இணைப்பு திட்டம்

சென்னை, ஜூலை 18-

    சென்னை ஓஎம்ஆர் பகுதியில் முதல் குழாய் இயற்கை  எரிவாயு இணைப்பு திட்டத்தை அர்பன்ரைஸ் நிறுவனத்து டன் இணைந்து ஏஜி&பி பிரதம் நிறுவனம் துவக்கியுள்ளது.

      இந்நிறுவனம் கட்டிவரும் ரெவல்யூஷன் ஒன் அடுக்குமாடி குடியிருப்பில் 4500 வீடுகளுக்கு இந்த வசதியை  வழங்குகிறது .    தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த  பகுதியான கேளம்பாக்கம் மற்றும் நாவலூர் ஆகிய இடங்களில் வசிக்கும் மக்கள் தற்போது 354 ரூபாய் கட்டணம்  செலுத்தி புதிய குழாய் எரிவாயு இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம்.  

     புதிய இணைப்பு மற்றும் சேவைகளுக்கு வாடிக்கை யாளர்கள் 1800 2021 999 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.  

     மேலும் இந்தத் திட்டத்தை அடுத்த சில மாதங்களில் செம்மஞ்சேரி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய இடங்க ளுக்கும் விரிவாக்கம் செய்ய உள்ளதாக அர்பன்ரைஸ் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் பி. சந்திர சேகர் ரெட்டி  கூறினார்.