districts

img

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெண் வாக்காளர்களே அதிகம்

திருவண்ணாமலை, ஜன.22-  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  2024 ஆம் ஆண்டு இறுதி வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதி நிதிகள் முன்னிலையில் கூடு தல் ஆட்சியர் ரிஷப் வெளியிட்டார். அதில் ஆண் களை விட 43,194 பெண் வாக்காளர்கள் அதிகமாக இடம் பெற்றுள்ளது குறிப் பிடத்தக்கது.  இம் மாவட்டத்தில் செங்கம் (தனி) சட்டமன்றத் தொகுதியில், ஆண்கள் 13,7467, பெண்கள் 13,9989,  இதரர் 11 என மொத்தம்  27,7467 வாக்காளர்கள் உள்ளனர். திருவண்ணா மலை தொகுதியில், ஆண் கள் 1,33,931, பெண்கள் 1,43,012, இதரர் 40 என  மொத்தம் 2,76,983 வாக் காளர்கள் இடம்பிடித்துள்ள னர். கீழ்பென்னாத்தூர் தொகுதியில், ஆண்கள் 1,25,004, பெண்கள் 1,30,147, இதரர் 11 என மொத்தம் 2,55,162 வாக்காளர்களும், கலசப்பாக்கம் தொகுதியில், ஆண்கள் 1,22,113, பெண்கள் 1,25,855, இதரர் 10 என மொத்தம் 2,47,978 வாக்காளர்களும்,  போளூர் சட்டமன்றத் தொகுதியில், ஆண்கள் 1,18,568, பெண்கள் 1,23,094, இதரர் 14 என மொத்தம் 2,41,676 வாக்காளர்கள் உள்ளனர். ஆரணி சட்டமன்றத் தொகுதியில், ஆண்கள் 1,34,443, பெண்கள் 1,42,462, இதரர் 25 என மொத்தம் 2,76,930 வாக்காளர்களும்,  செய்யார் தொகுதியில், ஆண்கள் 1,27,276, பெண் கள் 1,33,206, இதரர் 9 என  மொத்தம் 2,60,491 வாக்கா ளர்களும்,   வந்தவாசி(தனி) தொகுதியில், ஆண்கள் 1,19,938, பெண்கள் 1,24,169, இதரர் 6 என மொத்தம் 2,44,113 வாக்காளர்களும் உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தமாக  10,18,740 ஆண் வாக்காளர் களும்,  10,61,934 பெண் வாக்காளர்களும், 126 மூன்றாம் பாலின வாக்கா ளர்களும் உள்ளனர். இப்பட்டியல் அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட வாக்குச் சாவடி மையங்களில் வாக் காளர்களின் பார்வைக்கு வைக்கப்படும். ஏதேனும் திருத்தம் அல்லது பெயர் விடுபட்டு இருந்தால் உரிய படிவங் கள் மூலமாக விண்ணப் பித்து தங்கள் பெயரை வாக்காளர் பட்டி லில் இணைத்துக் கொள்ளலாம்.