தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்ககம் சார்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று (செப் 26) காலநிலை மாற்றத்தில் பருவநிலை மாற்றம் குறித்து நடைபெற்ற கருத்தரங்கத்தில் பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திரையிடப்பட்ட காணொலியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ் பார்வையிட்டார். உடன் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் உதவி இயக்குநர் மணிஷ்மீனா தமிழ்நாடு ஈரநிலை இயக்கம் உதவி இயக்குநர் யோகேஷ்குமார் கார்க் மாவட்ட வன அலுவலர் ரவி மீனா உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ் வெங்கட் வத்ஸ் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் அலுவலர் (கும்மிடிப்பூண்டி) லிவிங்ஸ்டன், முனைவர்.சுருதி உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.