districts

img

இந்தியா கூட்டணி சார்பில் திருபெரும்புதூர் தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு போட்டி

இந்தியா கூட்டணி சார்பில் திருபெரும்புதூர் தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு போட்டியிடுகிறார். இதனையொட்டி மதுரவாயல் சட்டமன்ற தொகுதி கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வியாழனன்று (மார்ச் 21) போரூரில் நடைபெற்றது. காரம்பாக்கம் க.கணபதி எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், மதுரவாயல் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் க.பீம்ராவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மதுரவாயல் பகுதிச் செயலாளர் வி.தாமஸ் உள்ளிட்டு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.