திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் சிதம்பரம் (தனி) தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சிதம்பரம் நகரத்தில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார். இதில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ, திமுக வர்த்தக அணி சார்பில் கவிஞர் காசி முத்து மாணிக்கம், மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார, ஆதவ அர்ஜுன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.