புதுச்சேரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வெ.வைத்திலிங்கத்தை ஆதரித்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது. பிள்ளைத்தோட்டத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து ஞாயிறன்று பிரச்சாரம் துவங்கியது. இதில் மாநில தலைவர் கொளஞ்சியப்பன், செயலாளர் சரவணன், நிர்வாகிகள் அரிகிருஷ்ணன், உமா சாந்தி, ராம்ஜி,குப்புசாமி, முனியம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர்.வில்லியனூர், மதகடிப்பட்டு, திருக்கனூர், பாகூர், காரைக்கால் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது.