சென்னையில் தொடர் வெடிகுண்டு மிரட்டல் இமெயில் தகவலை பகிர்ந்த சுவிட்சர்லாந்து நிறுவனம்
சென்னை,மார்ச் 7- சென்னையில் கடந்த மாதம் 13 தனி யார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல் ஒன்று வந்தது. உடனடியாக காவல்துறை அதிகாரி கள், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் அனைத்து தனியார் பள்ளி களுக்கும் சென்று பள்ளி வளாகம், அறைகள் முழுவதும் சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்த பள்ளி மாணவர்களை பத்திரமாக அப்புறப்படுத்தி னர். பின்னர் சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து இமெயில் முகவரி குறித்து விaவரங்கள் சேகரிக்கும் பணியில், சென்னை மாநகர காவல்துறை தீவிரம் காட்டி வந்தனர். இந்நிலையில், கடந்த வாரம் சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் கோவை உள்ளிட்ட பகுதிகளியில் தனியார் பள்ளி களுக்கு இதேபோல் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதேபோல், புதனன்று குரோம்பேட்டை பகுதியில் இயங்கி வரும் எம்ஐடி தொழில்நுட்பக் கல்லூரிக்கும் நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. சென்னையில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரின் இமெயில் ஐடி புரோட்டான் எனப்படும் நிறுவனத்தின் மெயில் முகவரி மூலமாக ஒரே நபர்தான் இந்த மிரட்டல்களை விடுத்திருக்கலாம் என போலீசார் விசாரணையில் கண்டு பிடித்தனர். இதையடுத்து, சென்னை மத்திய சைபர் க்ரைம் போலீசார், இமெயில் மூலம் மிரட்டல் விடுத்த நபரின் விவ ரங்கள், ஐபி முகவரி கேட்டு சம்பந்தப்பட்ட சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த புரோட்டான் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியிருந்தது. ஆனால், இந்த கடிதத்திற்கு எந்த பதிலும் சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து வரவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த இமெயில் சேவையை இந்தியாவில் முடக்க சென்னை போலீசார் ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்று அனுப்பிய தாக கூறப்படுகிறது. மேலும், மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் மூலம் புரோட்டான் நிறுவனத்திற்கும் இமெயில் ஐடி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. இதனையடுத்து புரோட்டான் நிறுவனம் தரப்பில், அந்த மிரட்டல் விடுத்த இமெயில் ஐடியின் தகவலை சென்னை போலீ சாருக்கு தெரிவித்துள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது. இதன் அடிப்படையில், இமெயில் மூலம் மிரட்டல் விடுத்த நபரின் ஐபி முகவரி, அவர் எங்கிருந்து இந்த இமெயில் அனுப்பினார் போன்ற விவ ரங்களைச் சேகரிக்கும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் அந்த நபர் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி நிர்வாகத்திற்கும், கல்லூரி நிர்வாகத்திற்கு இமெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல் ஏதாவது வந்தால் உடன டியாக காவல்துறை தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.
குரூப் 1 மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு : மார்ச் 26-ல் நேர்காணல்
சென்னை, மார்ச் 7- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப் 1 பதவிகளில் அடங்கிய துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 95 காலிப் பணி யிடங்களுக்கான தேர்வை, கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி நடத்தியது. கடந்த ஆண்டு நடந்து முடிந்த முதல் நிலைத் தேர்வினை 3 லட்சத்திற்கும் அதிக மானோர் எழுதினர். இதன் முடிவுகள் 2023 ஏப்ரல் 28ஆம் தேதி வெளி யிடப்பட்டது. முதல் நிலைத்தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்கள், அவர்களது அசல் சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய 2023 மே 8ஆம் தேதி முதல் மே 16 வரை கால அவ காசம் கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, முதன்மைத் தேர்வு 2023 ஆகஸ்ட் 10 முதல் 13ஆம் தேதி வரையில் நடைபெற்றது. இந்தத் தேர்வில், ஒரு பணியிடத்திற்கு சுமார் 20 பேர் வீதம் தேர்வு எழுது வதற்கு அழைக்கப்பட்டனர். இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்டுள்ள தகவலில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் முதன்மைத் தேர்வு ஆகஸ்ட் 10 முதல் 13ஆம் தேதி வரையில் நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில், நேர்காணல் தேர்விற்கு தேர்வான வர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளது. அவர்களுக்கு மார்ச் 26 முதல் 28 வரையில் நேர்காணல் நடைபெறுகிறது. தேர்விற்கு விண்ணப்பிக்கும்போது அனுப்பிய சான்றிதழ்களின் உண்மைச் சான்றிதழ்களை எடுத்துக் கொண்டு வர வேண்டும். மேலும், விண்ணப்பிக்கும்போது அளிக்கப்பட்ட செல்போன் எண் மற்றும் இமெயில் முகவரிக்கு அழைப்பு அனுப்பப்படும். அதில் அவர்களுக்கான நேரத்தில் கலந்தக் கொள்ள வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.
2017ம் ஆண்டின் வழிகாட்டி மதிப்பீட்டை பின்பற்ற வேண்டும்: உயர்நீதிமன்றம்
சென்னை, மார்ச் 7- தமிழகத்தில் சொத்துக்களுக்கான வழி காட்டி மதிப்பீட்டை மாற்றி அமைத்து தமிழக அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம் 2017 ஆம்ஆண்டு வழிகாட்டி மதிப்பீட்டை பின்பற்ற உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சொத்துக்களுக்கான வழி காட்டி மதிப்பீடு கடந்த 2012ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது. பின், 2017ம் ஆண்டு 33 சதவீதம் குறைக்கப்பட்டது. இந்நிலை யில், சொத்துக்களின் விலை அதிகரித்துள்ள தால் வழிகாட்டி மதிப்பீட்டை அதி கரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ள தாகவும், மதிப்பீட்டுக் குழு, வழிகாட்டி மதிப்பீட்டை நிர்ணயிக்க கால அவகாசம் எடுத்துக்கொள்ளும் என்பதால், கடைசி யாக நிர்ணயிக்கப்பட்ட 2012ம் ஆண்டு வழிகாட்டி மதிப்பீட்டை பின்பற்ற வேண்டும் என அறிவித்து, 2023 மார்ச் 30ஆம் தேதி சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து கிரடாய் மற்றும் 3 கட்டுமான நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் விதிகளின்படி துணைக் குழுக்கள் அமைத்து, அறிக்கைகள் பெற்று, அவற்றை ஆய்வுசெய்து, பொதுமக்கள் கருத்துகளை பெற்ற பிறகே வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்க முடியும் என்ற சட்ட விதிமுறைகள் பின்பற்றப்பட வில்லை எனக் கூறி, மாநில அரசின் சுற்ற றிக்கையை ரத்துசெய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதி பதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ராஜசேகர் அமர்வு, கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டனர். மேலும், சட்ட விதிகளை பின்பற்றி வழிகாட்டி மதிப்பீட்டை மாற்றியமைக்கும் வரை, கடந்த 2017ம் ஆண்டின் வழிகாட்டி மதிப்பீட்டையே பின்பற்ற வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், 2023 மார்ச்சுக்கு பின், இதுவரை பதிவு செய்த ஆவணங்களுக்கு மட்டும் விலக்களிக்கப்படுவதாகவும், தொடர்ந்து 2023 மார்ச் சுற்றறிக்கையின் அடிப்படையில் முத்திரைத்தாள் கட்டணத்தை திருப்பி அளிக்கும்படி எவரும் கோர முடியாது எனவும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
வட்டாட்சியர்களுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு தடை
சென்னை, மார்ச் 7- சென்னை அம்பத்தூரில் உள்ள மோலி அலெக்சாண்டர் என்பவரது நிலத்துக்கு பட்டா வழங்கும்படி, அம்பத்தூர் வட்டாட்சியருக்கு கடந்த 2010ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தா ததை அடுத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு மேலாக உயர் நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் வேண்டுமென்றே அவ மதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 முதல் அம்பத்தூர் வட்டாட்சி யராக பதவி வகித்த 16 பேருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து, இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறை யீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் ஆஜராகி, தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வட்டாட்சியர்களுக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இரு துணை வேந்தர்கள் பதவிக்காலம் நீட்டிப்பு
இரு துணை வேந்தர்கள் பதவிக்காலம் நீட்டிப்பு சென்னை, மார்ச் 7- தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சந்தோஷ் குமார் பதவிக்காலம் வரு கிற ஏப்ரல் 8 அன்று முடிய வடைய உள்ளது. இந்த நிலையில், அவரின் பதவிக் காலத்தை ஏப்ரல் 9 முதல் மேலும் ஓராண்டிற்கு நீடித்து தமிழ்நாடு ஆளு நரும், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல் கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார் அதேபோல், தமிழ் நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் க.ந.செல்வக்குமார் பதவிக்காலமும் ஏப்ரல் 8 உடன் முடியவடைய உள்ள நிலையில், அவரின் பதவிக்காலத்தை ஏப்ரல் 9 முதல் மேலும் ஒராண்டிற்கு நீடித்து அப்பல்கலைக்கழகத்தின் வேந்தரும் ஆளுநருமான ஆர்.என்.ரவி உத்தர விட்டுள்ளார்.
மண்டல அலுவலகங்கள் கட்ட மேயர் அடிக்கல்
கடலூர், மார்ச் 7- கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட குண்டு சாலை மற்றும் புதுப்பாளையத்தில் மண்டல அலுவலகம் கட்டும் பணிக்கு தலா ரூ.2.50 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டது. இதையடுத்து அலுவலகம் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா ஆணையாளர் காந்திராஜ் தலைமையில் வியாழனன்று நடைபெற்றது. மாநகர திமுக செயலாளர் ராஜா முன்னிலை வகித்தார். மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர். இதில் மண்டல குழு தலை வர்கள் பிரசன்னா, சங்கீதா, கவுன்சிலர் கள் கீதா குணசேகரன், ஆராஅமுது, விஜயலட்சுமி செந்தில், செந்தில்குமாரி இளந்திரையன், சுதா அரங்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கடலூர் புதுப்பாளையம் கணபதி நகர், மேட்டு தெரு, விஜயலட்சுமி நகர், சுப்பராயன் நகர், மோகன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தார் சாலை அமைக்கும் பணிக்கு ரூ 1.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்
கடலூர், மார்ச்.7- கடலூர் மாவட்டத்தில் உள்ள, தாலுகா காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவிலிருந்து பதிவு செய்யப்பட்ட வழக்கில், மதுபான கடத்தலுக்கு பயன் படுத்தப்பட்ட 4 நான்கு சக்கர வாகனங்கள், 12 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 71 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 87 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட் டுள்ளது. இந்த வாகனங்களை அரசுக்கு ஆதா யம் செய்யும் பொருட்டு, ஏலம் விட, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதை யடுத்து கடலூர் மாவட்ட எஸ்.பி ராஜாராம் பரிந்துரையின் பேரில் ஏலம் விடப்பட்டது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு, தங்களுக்கு தேவையான வாகனங்களை ஏலத்தில் எடுத்தனர். இதில் 87 வாகனங் கள் மொத்தம் 19 லட்சத்து 78 ஆயிரத்து ரூ.624 ஏலம் போனது.
பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிக்கு விருது
திருவண்ணாமலை, மார்ச்.7- திருவண்ணாமலை மாவட்டம், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல அலு வலரின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் சிறந்த 3 விடுதிகளை தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் அரசு பரிசுத்தொகை மற்றும் கேடயம் வழங்கி வருகிறது.. கடந்த 2022-2023 ஆம் ஆண்டிற்கு விடு தியினை நல்ல முறையில் பராமரித்த தற்காக வேட்டவலம் அரசினர் பள்ளி மாணவியர் விடுதிக்கு முதல்பரிசாக ரூ.10 ஆயிரமும், திருவண்ணாமலை அரசினர் கல்லூரி மாணவியர் விடுதிக்கு இரண்டாவது பரிசாக ரூ 5 ஆயிரமும், 3ஆவது பரிசாக ரூ.3ஆயிரமும் விடுதிக் காப்பாளினிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் வழங்கினார். ரொக்கப்பரிசுடன் காசோலை, கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஓய்வூதியம் தராத நூற்பாலை : விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
கிருஷ்ணகிரி,மார்ச் 7- கூட்டுறவு நூற்பாலையில் பணி புரிந்து ஓய்வு பெற்றவருக்கு ஓய்வூதி யம் வழங்காததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஊத்தங்கரை அருகே உள்ள பாரதி புறத்தை சேர்ந்த பிரேமராஜன் (வயது 62) அங்குள்ள தர்மபுரி அரசு கூட்டுறவு நூற்பாலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராவார். இவருக்கும் இதுபோல் பணி ஓய்வு பெற்ற 50 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கும் இதுவரை ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இது குறித்து ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கேட்கும் போதெல்லாம் நிறுவனம் நட்டத்தில் ஓடிக்கொண்டிருப்பதாக நிர்வாக அதிகாரிகள் கூறி வந்துள்ளனர். இந்நிலையில் பிரேமராஜன் கடன் பிரச்சினையில் சிக்கி சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஓய்வூதியம் பலமுறை கேட்டும் கிடைக்காத தால் என்ன செய்வது என்று தெரியா மல் மனமுடைந்த அவர் மார்ச்.5 அன்று ஸ்பின்னிங் மில் கேண்டின் வளாகத்தில் விஷம் குடித்தார்.அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வியாழனன்று அந்த தொழிலாளி உயிரிழந்தார். இது குறித்து ஊத்தங்கரை காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.