districts

img

ஓராண்டாகியும் சீரமைக்கப்படாத தடுப்புச் சுவர்!

விழுப்புரம், அக். 7- விழுப்புரத்தில் சேத மடைந்து கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டி ருக்கும் சாலை தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டி கள் கோரிக்கை விடுத்துள்ள னர். விழுப்புரம் - புதுச்சேரி நெடுஞ்சாலை போக்கு வரத்துக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சாலையாகும். தினசரி ஆயிரக்கணக்கான வாக னங்கள் சென்று வரு கின்றன. இதனால் போக்கு வரத்து நெரிசலை தவிர்க்கும் வகையிலும், சாலை விபத்துகளை தடுக்கும் வகையிலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரத்திலிருந்து கோலியனூர் கூட்டுச் சாலை வரை விரிவாக்கப் பணி கள் சாலையின் நடுவே தடுப்புச் சுவர் அமைக்கப் பட்டது. இந்நிலையில் விழுப்பு ரம் சாலை அகரம் பெட்ரோல் நிலையம் அரு கில் ஓராண்டுக்கு முன்பு நள்ளிரவில் லாரி ஒன்று சாலையின் நடுவே தடுப்புச் சுவரில் மோதியது. இதில் அந்த தடுப்புச்சுவர் உடைந்து சேதமடைந்ததில் இரும்புக் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.   சில நாட்களுக்கு முன்பு அகரம் அரசுப்பள்ளி அருகே சாலை தடுப்புச்சுவரில் பேருந்து மோதி தலை கீழாக கவிழ்ந்து விபத்துக் குள்ளானதில் 15 பேர் காயமடைந்தனர். எனவே, விபரீதம் நடப்பதற்கு முன்பாகவே, சேதமடைந்த தடுப்புச்சுவரை சீரமைக்க வேண்டும் என்று பொது மக்களும், வாகன ஓட்டி களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;