சிதம்பரம், ஜன.24- சிதம்பரத்திலிருந்து நஞ்ச மகத்து வாழ்க்கை கிரா மத்திற்கு தினம் தோறும் நகரப் பேருந்து இயங்கி வந்தது. இந்த பேருந்து வண்டி கேட், மண்டபம், பெரிய மதகு, குண்டு மேடு உள் ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கிராமங்கள் வழியாக இயக்கப்பட்டது. இந்த நிலையில், 4 மாதங்களாக இந்த பேருந்து இயக்கப்பட வில்லை. இதனால் மக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் போக்கு வரத்து சிதம்பரம் பணிமனை அதிகாரியிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அதன்பிறகு, மீண்டும் பேருந்து இயக்கப்பட்டது. அந்தப் பேருந்து மீண்டும் 10 நாட்களுக்குள் நிறுத்தப் பட்டது. இதுகுறித்து போக்குவரத்து அதிகாரி களுக்கு பலமுறை தெரி வித்தும் கண்டுகொள்ள வில்லை. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆழ்வார் தலைமையில் பாதிக்கப்பட்ட கிராம மக்கள், பள்ளி மாணவர்கள், கூலித் தொழிலாளர்கள் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர் வாஞ்சிநாதன் உள்ளிட்டோர் அரசு போக்கு வரத்து பணிமனையை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நகரப்பேருந்து மீண்டும் இயக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர். பின்னர், போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் வசந்தராஜாவை சந்தித்த னர். அப்போது, சம்பந்தப்பட்ட வழித்தடத் தில் 4 மாதமாக நகர பேருந்து சென்று கொண்டி ருப்பதாக உண்மைக்கு மாறான தகவலை தெரி வித்தார். இதில், இரு தரப்பினருக்கும் வாக்குவா தம் ஏற்பட்டது. பிறகு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு, இனிமேல் எந்த தடையும் இல்லாமல் இந்த வழித்தடத்தில் நகரப் பேருந்து இயக்கப்படும் என உறுதியளித்தார். இதனால் அனைவரும் கலைந்து சென்றனர்.