சென்னை, பிப். 24- கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் பயோ மைனிங் முறை யில் குப்பைகளை பிரித்தெடுக்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் துவக்கி வைத்தார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மொத்தம் 2,465 கோடி ரூபாய் செலவில் 96 முடிவுற்ற திட்டப் பணிகளை நெம்மேலியில் இருந்து காணொலி வாயிலாக சனிக்கிழமை (பிப். 24) தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் (பயோ மைனிங்) குப்பை களை பிரித்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்கும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகம் 342.91 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அதில் சுமார் 252 ஏக்கர் நிலத்தில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இங்கு 1980ஆம் ஆண்டுக்கு முன்பிலிருந்தே குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இங்கு திருவொற்றியூர், மணலி, மாதவரம், தேனாம்பேட்டை, ராய புரம், திரு.வி.க. நகர், அம்பத்தூர் மற்றும் அண்ணாநகர் ஆகிய 8 மண்டலங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகிறது. இங்கு கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் ட்ரோன் மூலம் கணக்கெடுப்பு நடத்தி, 66.52 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டது. இந்நிலையில் 648.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொடுங்கை யூர் குப்பை கொட்டும் வளாகத்தில் பல ஆண்டுகளாக கொட்டப்பட் டுள்ள குப்பைகளை உயிரி அகழ்ந் தெடுத்தல் முறையில் பிரித்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார். கழிவு நீர் குழாய் அதேபோல் ராயபுரம் மண்டலம், சிந்தாதிரிப்பேட்டை மற்றும் புதுப்பேட்டை பகுதியில் உள்ள பல்வேறு தெருக்களில் பிரதான கழிவுநீர் குழாய்களை விரிவாக்கும் பணிகள், கொளத்தூர் வார்டு 62இல் கூவம் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, அதனை நாவலர் நகர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்புவதற்காக பிரதான உந்து குழாய்கள் பதிக்கும் பணிகள் மற்றும் மேற்கு கூவம் ஆற்றின் கரையில் சாலையோர கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கும் பணிகள்; பெருங்குடி மண்டலம், ஜல்லடியான்பேட்டை பகுதிக்கான விரிவான பாதாள சாக்கடை திட்டம் என மொத்தம் 101.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் 3 புதிய திட்டப் பணிகளுக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். பூங்கா, விளையாட்டு திடல் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், திருவொற்றியூர் மண்டலத்திற் குட்பட்ட சுனாமி குடியிருப்பு பகுதி, திரு.வி.க.நகர் மண்டலத் திற்குட்பட்ட ஏ.கே. சுவாமி முதல் தெரு, பெருங்குடி மண்டலத்திற் குட்பட்ட செட்டிநாடு என்கிளேவ், ஜல்லடியன்பேட்டை, கிருஷ்ணா நகர் 3ஆவது குறுக்குத் தெரு மற்றும் முத்து நகர் ஆகிய பகுதிகளில் 1.94 கோடி ரூபாய் செலவில் அமைக் கப்பட்டுள்ள 5 புதிய பூங்காக்கள் மற்றும் பெருங்குடி மண்டலம் கொட்டிவாக்கம் சுப்பிரமணியம் சாலை மற்றும் பள்ளிக்கரணை, காமகோட்டி நகர் 6ஆவது தெரு ஆகியவற்றில் 1.21 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 2 விளையாட்டுத் திடல்கள் என மொத்தம் ரூ.70.79 கோடி மதிப்பிலான திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.