சென்னை மணலி, மாதவரம் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும், பெரிய தோப்பில் அனைவருக்கும் குடிமனைப்பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மணலி-சேக்காடு பகுதிச் செயலாளர் பாபு தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று (டிச 20) மனு அளிக்கப்பட்டது. இதில் பகுதி குழு உறுப்பினர் முருகன், முன்னாள் செயலாளர் இரா.இராஜவர்மன், பெரியசேக்காடு கிளை செயலாளர் ருக்மாங்கதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.